முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சியால் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் தாயகம் வந்தடைந்தனர்

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சியால் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் தாயகம் வந்தடைந்தனர்

சனி, ஜூலை 30,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பயனாக, இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர்  தாயகம் வந்துசேர்ந்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 77 மீனவர்களையும் இலங்கைச் சிறைகளில் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். இதன் பயனாக, 77 தமிழக மீனவர்களும் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்டு, புதன் கிழமை (ஜூலை,27), தாயகம் திரும்பினர்.

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்

வெள்ளி, ஜூலை 29,2016, அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று  பட்ஜெட் மீது 4-வது நாளாக விவாதம் நடந்தது. விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி இருந்ததாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட

முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு

வெள்ளி, ஜூலை 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருவதாக, சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மனிதநேய ஜனநாய மக்கள் கட்சி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழகத்தில், முதலமைச்சர்  ஜெயலலிதா, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக திகழ்ந்து வருவதாக பாராட்டுத் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஜூலை 29,2016, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அதிமுகவினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார். பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 31,834 தொண்டர்களுக்கு  உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில்,முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது:- அதிமுகவில் இணைந்துள்ளோரின் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும். அனைவரும் இன்றைக்கு உள்ள உற்சாகத்தோடு

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் : அத்தனை பேர் வாழ்விலும் புது வசந்தம் மலரும் என முதல்வர் ஜெயலலிதா பேச்சு

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் : அத்தனை பேர் வாழ்விலும் புது வசந்தம் மலரும் என முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஜூலை 29,2016, சென்னை : சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திமுக, காங்கிரஸ், , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 31,834 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் சென்னை, ராயப்பேட்டையில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, த.மா.கா, தேமுதிக, ம.தி.முக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழக மக்கள்