கெலவரப்பள்ளி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு : 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

கெலவரப்பள்ளி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு : 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

செவ்வாய், ஜூலை 19,2016, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் முதல்போக புன்செய் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மற்றும் கிளைக் கால்வாய்களில் முதல்போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை

தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம் : மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம் : மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

செவ்வாய், ஜூலை 19,2016, கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார். சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று

மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ரூ.10½ லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க 14 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ரூ.10½ லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 19,2016, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 ஏழை மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் தொகையை முதலமைச்சர் ஜெயலலிதா நிதி உதவியாக அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.மனோஜ்குமார், ஆர்.செல்வபாண்டி, எஸ்.ஜே.சூரியபிரகாஷ், டி.இலக்கிய எழிலரசி, எஸ்.நஸ் ரீன், சி.கோகிலா, பி.கார்த்திக், எம்.மகேஸ்குமார், எம்.சுர்ஜித், எஸ்.சரிதா, ஆர்.குட்ரோஸன் ஆகிய 11 பேர் அரசு-தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்கவும், ஆர்.பழனிவேல், ஜி.சௌம்யா ஆகியோர் எம்.ஐ.டி., பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்கவும்

31.11 லட்சம் மாணவ – மாணவியருக்கு கட்டணமில்லா இலவச பஸ் பாஸ் : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

31.11 லட்சம் மாணவ – மாணவியருக்கு கட்டணமில்லா இலவச பஸ் பாஸ்   : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜூலை 19,2016, சென்னை:முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 2016-2017-ம் கல்வி ஆண்டில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா  பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி,

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வேலூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட  வேலூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

செவ்வாய், ஜூலை 19,2016, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க. கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஜி.ஜி.ரவி (28–வது வட்டம், சத்துவாச்சாரி மேற்கு பகுதி, வேலூர் மாநகராட்சி) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்

ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஒய்வூதிய ஆணையை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

ஆர்.கே. நகர் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஒய்வூதிய ஆணையை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய், ஜூலை 19,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று, சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மேம்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை துவக்கிவைத்து, 193