ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

செவ்வாய், ஜூலை 12,2016, புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள்

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் த.ரமேஷ் விடுவிப்பு,வி.வி.செந்தில் நாதன் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 12,2016, கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்த பொறுப்புக்கு திரு.V.V.செந்தில்நாதன் நியமிக்கப்படுவதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.த.ரமேஷ் இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூலை 12,2016, கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை., 3.3.2016 அன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான கிராமத்தைச் சேர்ந்த, முனியாண்டி என்பவரின் மகன் அழகர், 30.5.2016 அன்று சென்னை, மயிலாப்பூர் வட்டம், டுமிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஆரோக்கியம், 3.6.2016 அன்று சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் நன்றி

திங்கள் , ஜூலை 11,2016, சென்னை : 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் கணேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு., தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் காக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நான்கு ஆண்டு காலத்திற்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நீட்டித்து

வேதாரண்யம் புதிய நகர செயலாளர் எழிலரசன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வேதாரண்யம் புதிய நகர செயலாளர் எழிலரசன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜூலை 11,2016, சென்னை : அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ., என்.வி.காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேதாரண்யம் நகர அ.தி.மு.க செயலாளராக எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்

வள்ளியூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது

வள்ளியூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது

திங்கள் , ஜூலை 11,2016, அ.தி.மு.க. மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும், திசையன்விளை நகர பஞ்சாயத்து தலைவருமான ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கழக அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.அப்போது தி.மு.க., காங்கிரஸ்,