எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா,மதுரையில் இன்று கோலாகல தொடக்கம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா,மதுரையில் இன்று கோலாகல தொடக்கம் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஜூன்  30 ,2017 ,வெள்ளிக்கிழமை, மதுரை : அ.தி.மு.க.நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மதுரையில் இன்று கோலாகலமாக துவங்குகிறது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழா மதுரையில் இன்று அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள ரிங்ரோடு அம்மா திடலில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி

பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் டி.ஜெயக்குமார்

பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க படும் : அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : பட்டாசு, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகமிக அழுத்தம் கொடுக்கும் என்று நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  ”பட்டாசுக்கு 28 சதவீதம், தீப்பெட்டிக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பட்டாசு, தீப்பெட்டித் தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர்

இணையம் மூலம் மணல் முன்பதிவு செய்யும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

இணையம் மூலம் மணல் முன்பதிவு செய்யும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணலை பெற இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போதுமான மணல் கிடைக்க ஏதுவாக, புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் மணலை முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்

நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள்

முதல்வர் பழனிச்சாமிக்கும் எனக்கும் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை : டிடிவி தினகரன் பேட்டி

முதல்வர் பழனிச்சாமிக்கும் எனக்கும் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை : டிடிவி தினகரன் பேட்டி

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்றும், 2 மாத காலத்திற்குப் பிறகு அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும் என்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  டி.டி.வி.தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. “அதிமுகவின் தலைவர் சசிகலாதான். அவரால் இப்போது செயல்படமுடியாத நிலை உள்ளது. எனவே சில நடக்க கூடாத

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவு மண்டபம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவு மண்டபம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடை பெற்றது.இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள். பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அப்போது அவர்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ,முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை

ஜூன் , 28 ,2017 , புதன்கிழமை, சென்னை : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது. தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் பற்றியும், விழாவுக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் இந்தக்