சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் : “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, புள்ளி விவரங்களுடன் தகவல்

சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடம் : “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, புள்ளி விவரங்களுடன் தகவல்

சனி, ஜூலை 02,2016, பிரபல சுற்றுலா தலங்களான கோவா, கேரளா ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக பிரபல ஆங்கில நாளேடு ஒன்று புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது. “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தமிழகத்திற்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற சுற்றுலா முக்கியத்துவம்

ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு,ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி,தந்தை வேலுச்சாமிக்கு சமையலர் பணி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு,ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி,தந்தை வேலுச்சாமிக்கு சமையலர் பணி  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜூலை 02,2016, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மாதந்தோறும் 11,250 ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி கவுசல்யாவும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவுசல்யாவின் பொருளாதார நிலையைக் கருதி, உரிய நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, ஆதிதிராவிட நலத்துறை

அ தி.மு.க. சார்பில் இன்று இப்தார் விருந்து : முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்

அ தி.மு.க. சார்பில் இன்று இப்தார் விருந்து : முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்

சனி, ஜூலை 02,2016, சென்னை:அ தி.மு.க.  சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று   இப்தார் விருந்து வழங்குகிறார். 6-ந்தேதி (புதன்கிழமை) அன்று ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் முதலமைச்சர் ஜெயலலிதா முஸ்லிம் மக்களுக்கு இப்தார் விருந்து வழங்கி வருகிறார். முஸ்லிம்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,100 டன் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்கி இருக்கிறார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக- பாதுகாப்பு அரணாக இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டும் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு விருந்து வழங்குகிறார். இது குறித்து

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் : சந்திரபாபு நாயுடுவுக்கு அவசரக் கடிதம்

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் : சந்திரபாபு நாயுடுவுக்கு அவசரக் கடிதம்

சனி, ஜூலை 02,2016, சென்னை:பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப் பட்டிருப்பதற்கு   – முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலாற்றின் தடுப்பணை உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட ஆந்திர நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள் என்று வலியுறுத்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., பாலாற்றின் தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12

ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூலை 01,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிக்கழகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆகியவற்றுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. எம்.ஏ.முனியசாமி ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில்