இந்தியாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் : ஆதாரங்களுடன் ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்தியாவில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்  : ஆதாரங்களுடன் ரிசர்வ் வங்கி அறிக்கை

புதன், ஜூன் 29,2016, இந்தியாவிலேயே மிக அதிக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும் புள்ளி விவர ஆதாரங்களுடன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில நாளேடான The New Indian Express, இன்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2014-ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், தமிழகத்தில் நாட்டிலேயே மிக அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், மிக அதிக அளவில் தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை மாணவி பிரியதர்ஷினிக்கு மருத்துவ கல்வி பயில ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஏழை மாணவி பிரியதர்ஷினிக்கு மருத்துவ கல்வி பயில ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

புதன், ஜூன் 29,2016, சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கட்டணமாக 1,10,000/- ரூபாயை மாணவியின் குடும்பத்தினரிடம் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச்சேர்ந்த பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினி, சென்னை, கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக, தமது குடும்பத்தின்

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த நிதியுதவியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற சரவணன், முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த நிதியுதவியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற  சரவணன், முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி

புதன், ஜூன் 29,2016, முதலமைச்சர்  ஜெயலலிதாவை இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. S. சரவணன்,  தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, தனது கல்விச் செலவுக்கான அனைத்து உதவிகளையும் வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து, ஆசி பெற்றார். ஈரோடு மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகனான திரு. s. சரவணன், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த

தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் – 11,967 பேர், அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா உரை

தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் – 11,967 பேர், அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா உரை

புதன், ஜூன் 29,2016, சென்னை:சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் என்றும் மாற்று கட்சியினர், அ.தி.மு.க.வில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க என்றும் அவர் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகம் அருகே மாற்றுக்கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்று பல்வேறு

ஊழல் செய்வதில் காங்கிரசுக்கு திமுகவும் சளைத்தது அல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

ஊழல் செய்வதில் காங்கிரசுக்கு திமுகவும் சளைத்தது அல்ல – பொன்.ராதாகிருஷ்ணன்

செவ்வாய், ஜூன் 28,2016, திருச்சி: வெளியில் தெரியாமல் ஊழல் செய்வதில் எப்போதும் வல்லவர்கள் என்ற வரலாற்றை காங்கிரஸ் தக்க வைத்து கொண்டு வருகிறது எனவும் காங்கிரசுக்கு தி.மு.க.வும் சளைத்தது அல்ல என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை எதிர்ப்பு தின கூட்டம் பாஜக சார்பில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியாதாவது: வெளியில் தெரியாமல் ஊழல் செய்வதில் எப்போதும் வல்லவர்கள் என்ற