நாய்கள் படுத்துத்தூங்கிய இடத்தில் தூங்கிய என்னை அதே இடத்தில் எம்.எல்.ஏ.வாக உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா; சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாஸ் உருக்கம்

நாய்கள் படுத்துத்தூங்கிய இடத்தில் தூங்கிய என்னை அதே இடத்தில் எம்.எல்.ஏ.வாக உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா; சட்டசபையில் எம்.எல்.ஏ. கருணாஸ் உருக்கம்

புதன், ஜூன் 22,2016, நாய்கள் படுத்துத்தூங்கிய இடத்தில் உறங்கியவனை அதே இடத்தில் எம்.எல்.ஏ.வாக உயர்த்தி அங்கீகரித்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சட்டசபையில் நடிகர் கருணாஸ் உருக்கமாகப்பேசினார். தமிழக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நேற்று தொடர்ந்து நடந்தது. அப்போது, நடிகரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான (திருவாடானை) சே.கருணாஸ் பேசியதாவது:- இன்று பெரிய கட்டிடமாக இருக்கும் சட்டமன்ற விடுதி வளாகத்தைப் பார்க்கிறேன். நான் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, தங்குவதற்கு இடமில்லாமல், அந்த சட்டமன்ற

கச்சத்தீவு விஷயத்தில், தான் செய்த தவறை மூடிமறைக்க தி.மு.க. முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விஷயத்தில், தான் செய்த தவறை மூடிமறைக்க தி.மு.க. முயற்சிப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

புதன், ஜூன் 22,2016, கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்த போது, அன்றைய தி.மு.க. அரசு, இதனை தடுத்திருந்தால், தமிழக மீனவர்களுக்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது என மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பேசிய திரு. பொன். ராதாகிருஷ்ணன், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட விஷயத்தில், தி.மு.க., தான் செய்த தவறை மூடிமறைக்க பார்ப்பதாக கூறினார். கச்சத்தீவை மீட்பதற்கு

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் : சட்டப்பேரவையில் அமைச்சர் P. தங்கமணி தகவல்

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் : சட்டப்பேரவையில் அமைச்சர் P. தங்கமணி தகவல்

புதன், ஜூன் 22,2016, தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான மீத்தேன் திட்டத்திற்கான அரசாணையை ஆராய்ந்து அத்திட்டத்தை தடுத்து நிறுத்தியது முதலமைச்சர் ஜெயலலிதாதான் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மீத்தேன் திட்டம் குறித்து தெரிவித்த தவறான தகவலுக்கு, மறுப்பு தெரிவித்து, பதிலளித்து பேசிய அமைச்சர் திரு. P. தங்கமணி, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் அரசாரணை வெளியிடப்பட்டதாகவும், அதனை ஆராய்ந்து அத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நிறுத்திவைத்ததாகவும் தெரிவித்தார்.

ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி

ரூ.1 கோடி நிவாரணம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி

செவ்வாய், ஜூன் 21,2016, ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். ஒசூரில் கடந்த 15-ஆம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது தலைமைக் காவலர் முனுசாமி கொள்ளையர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் உதவி ஆய்வாளர் நாகராஜ், காவலர் தனபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விதி 110-இன் கீழ் முதல்வர்

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார் : செம்மலை குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார் : செம்மலை குற்றச்சாட்டு

செவ்வாய், ஜூன் 21,2016, சமஸ்கிருதத்தை எதிர்க்கும் கருணாநிதி, தனது பேரக்குழந்தைகளுக்கு மட்டும் சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளார்.என்று ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களை அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை சட்டசபையில் முன்வைத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை பேசியதாவது: கவர்னர் உரையை பலர் பாராட்டினார்கள். சிலருக்கு பாராட்ட மனமில்லை. இதுபற்றி முன்னாள் முதல்வர் அண்ணா ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களை பற்றி  கவலைப்பட வேண்டாம்.