‘கலாம் சாட்’ செயற்கைகோளை உருவாக்கிய தமிழக விஞ்ஞானி குழுவுக்கு ரூபாய் 10 லட்சம் உதவித் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு

‘கலாம் சாட்’ செயற்கைகோளை உருவாக்கிய தமிழக விஞ்ஞானி குழுவுக்கு ரூபாய் 10 லட்சம்  உதவித் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவு

ஜூன் ,25 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : கையடக்க அளவில் கலாம் செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் மாவட்ட மாணவர் ரிஃபாத் சாருக் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவுக்கு சட்டப்பேரவையில், 110 விதியின்கீழ் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்தார். மேலும், அக்குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது,

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

ஜூன் ,24 ,2017 ,சனிக்கிழமை, சென்னை : மருத்துவப் படிப்பில் 85% இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தோருக்கே ஒதுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) பேசிய அவர், “நீட் தேர்வு பற்றி மத்திய அரசு அறிவித்தவுடன் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள முறைப்படி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய ஏதுவாக இரண்டு சட்டங்கள் இயற்றினோம். அதை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம். அது

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க விற்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்த அ.தி.மு.க  இரு அணிகளுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உள்ளார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எல்லா தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க அ.தி.மு.க ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதற்கு நன்றி. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் : கருணாஸ் பேட்டி

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ கூறினார். அதிமுக ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- குடியரசுத் தலைவர் தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்; உடல்நிலை சரியில்லாததால் முதலமைச்சர் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

ஜூன் 23 ,2017, வெள்ளிக்கிழமை,  சென்னை : அமித்ஷா ஆதரவு கேட்டதற்கு இணங்க பாரதீய ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஓ.பன்னீர் செல்வம்  அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா அணிசார்பில் நேற்று  கிரீன்வேஸ் கார்டனில் அவரது வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “ராம்நாத் கோவிந்த் ஒரு சிறந்த நிர்வாகி என்பதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தலித் ஒருவரை வேட்பாளராக