அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

சனி, ஜூன் 18,2016, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹிலாரிக்கு முதல்வர் ஜெயலலிதா, வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதம்: அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு, நான் தெரிவிக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், தாங்கள் முதல்

முதுகு தண்டில் காயம் அடைந்த சவுதி அரேபியாவில் பணியாற்றிய தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

முதுகு தண்டில் காயம் அடைந்த சவுதி அரேபியாவில் பணியாற்றிய தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜூன் 18,2016, சென்னை, சவுதி அரேபியாவில் பணியாற்றிய இடத்தில் நடந்த கொடுமையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் முதுகு தண்டில் காயம் அடைந்த தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாட்சாயிணி, சவுதி அரேபியாவில் பணிக்கு சென்று, அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியிலிருந்து குதித்ததில், முதுகு தண்டுவடத்தில் பலத்த

இன்று அ.தி.மு.க. செயற்குழு கூடுகிறது : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்

இன்று அ.தி.மு.க. செயற்குழு கூடுகிறது : முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கிறார்

சனி, ஜூன் 18,2016, சென்னை, அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலை அ.தி.மு.க செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து 32 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். முதல்வராக பொறுப்பேற்ற முதல்நாளே சட்டமன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஐந்து கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்

கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 17,2016, ஓசூர் தலைமை காவலர் முனுசாமி குற்றவாளிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கிரிப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமி செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது துயரம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாக

ஏழை – எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்ப பெற முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஏழை – எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்ப பெற முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ளி, ஜூன் 17,2016, சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும், மேலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 காசு என்ற அளவிலும், டீசல்

முதல் சட்டசபை கூட்டத்தொடர்:ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்

முதல் சட்டசபை கூட்டத்தொடர்:ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்

வெள்ளி, ஜூன் 17,2016, சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் ரோசய்யா உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதற்காக சட்டசபைக்கு நேற்று  காலை 11 மணிக்கு வந்த கவர்னர் ரோசய்யாவை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கவர்னர் ரோசய்யா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். 38 பக்கங்கள் கொண்ட உரையை 38 நிமிடங்கள் வாசித்தார் கவர்னர் ரோசய்யா, கவர்னர்  ரோசய்யா உரையின் முக்கிய அம்சங்கள் : *

தொடர்ச்சியாக 2- வது முறையாக ஆட்சியை பிடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

தொடர்ச்சியாக 2- வது முறையாக ஆட்சியை பிடித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வெள்ளி, ஜூன் 17,2016, சென்னை : தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா சட்டசபையில் பாராட்டு தெரிவித்தார். நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்ற உரிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வகுத்துள்ளார் என்று சட்டசபையில் கவர்னர் ரோசய்யா கூறினார். தமிழகத்தின் 15வது சட்டசபைக்கு கடந்த மே 16–ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 134 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சியை பிடித்து 6–வது