அதிமுக அமைப்புச் செயலராக நத்தம் விஸ்வநாதன் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக அமைப்புச் செயலராக நத்தம் விஸ்வநாதன் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜூன் 16,2016, அதிமுக அமைப்புச் செயலர்களாக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா  வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நத்தம் விஸ்வநாதன் அமைப்பு செயலராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், செய்தித் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிவாரண்டு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் விஜயதரணி எம்எல்ஏக்கு பிடிவாரண்டு

வியாழன் , ஜூன் 16,2016, நாகர்கோவில்  – முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணிக்கு நாகர்கோவில் செசன்சு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் சந்தை திடலில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, இளங்கோவன் மற்றும் விஜயதரணி ஆகிய இருவரும் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக நாகர்கோவில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வக்கீல் ஞானசேகர் வழக்கு தொடர்ந்தார்.  விஜயதரணி

400 ஆரம்ப சுகாதார மையங்களில் “அம்மா’ ஆரோக்கியத் திட்டம் மூலம் 25 வகையான பரிசோதனை

400 ஆரம்ப சுகாதார மையங்களில் “அம்மா’ ஆரோக்கியத் திட்டம் மூலம்  25 வகையான பரிசோதனை

வியாழன் , ஜூன் 16,2016, தமிழகத்தில் உள்ள 400 ஆரம்ப சுகாதார மையங்களில் “அம்மா’ ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25 வகையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:- எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் “அம்மா’ ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதுக்கு மேற்பட்ட

ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

வியாழன் , ஜூன் 16,2016, தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது. ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. சட்டப் பேரவையின் முதல் கூட்டம், கடந்த