தமிழக சட்டசபை ஜூன் 16-ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டசபை  ஜூன் 16-ம் தேதி கூடுகிறது

ஞாயிறு, ஜூன் 05,2016, சென்னை:15-வது தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 32 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் சட்டசபை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதைத்தொடர்ந்து கடந்த 3-ம் தேதி சபாநாயகர், துணைசபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி.க்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி.க்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

ஞாயிறு, ஜூன் 05,2016, சென்னை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அ.தி.மு.க. ராஜ்ய சபை எம்.பி.க்கள், நேற்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். முதல்வர் ஜெயலலிதாவை நேற்று  தலைமை செயலகத்தில் ராஜ்யசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர். வைத்திலிங்கம், ஏ. நவநீதகிருஷ்ணன், அ.விஜயகுமார், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். டெல்லி ராஜ்யசபை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழை தேர்தல் அதிகாரி ஜமாலுதீன் வழங்கினார். தமிழகத்தில், 6

இலங்கை சிறையில் வாடும் 11 மீனவர்களையும் 90 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 11 மீனவர்களையும் 90 படகுகளையும்  மீட்க  உடனடி நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஜூன் 05,2016, சென்னை:இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 11 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 90 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒரு முறை தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்

ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் கருணாநிதி பொய் பேசுகிறார் : கருணாநிதி மீது தமிழிசை தாக்கு

ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் கருணாநிதி பொய் பேசுகிறார் : கருணாநிதி மீது தமிழிசை தாக்கு

சனி, ஜூன் 04,2016, சென்னை: ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் பொய் உரையை கலைஞர் பிறந்தநாள் உரையாக ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் பரப்புரையை முடித்து ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் ஒரு பொய் உரையை கருணாநிதி பிறந்தநாள் உரையாக ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற உடன் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்த மக்கள் ஆடுகளாக மாறிவிடுவார்கள்

கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

சனி, ஜூன் 04,2016, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து செய்தி அறிந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, உதவித்தொகைகளை வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற லாரியின் டயர் வெடித்ததில், நிலைதடுமாறி ஓசூர் நோக்கி சென்ற தனியார்