அதிமுக பேச்சாளர் நடிகர் பாலு ஆனந்த் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

அதிமுக பேச்சாளர் நடிகர் பாலு ஆனந்த் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சனி, ஜூன் 04,2016, அதிமுக பேச்சாளர் நடிகர் பாலு ஆனந்த் மறைவுக்கு, கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:  அதிமுக மீதும், தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் பாலு ஆனந்த். கட்சியின் பேச்சாளராக கட்சியின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியினரின் பொய் பிரசாரங்களையும் எடுத்துரைத்தவர்.  அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூன் 04,2016, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.  இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:  நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியச் செயலர் பி.பி.சாமிநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் புல்லட் கே.பரிமளம், காஞ்சிபுரம் நகர 6-ஆவது வார்டு செயலாளர் பி.உமா மகேஸ்வரி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து

முட்டுக்காடு படகுகள் குழாம் மற்றும் மாமல்லபுரம் தங்கும் விடுதி பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் நேரில் ஆய்வு

முட்டுக்காடு படகுகள் குழாம் மற்றும் மாமல்லபுரம் தங்கும் விடுதி பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் நேரில் ஆய்வு

சனி, ஜூன் 04,2016, சென்னை அருகே உள்ள சுற்றுலாத்தலமான முட்டுக்காடு படகுகள் குழாம் மற்றும் மாமல்லபுரம் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் அமைச்சர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் கோவளம் அருகே உள்ள முட்டுக்காடு படகுகள் குழாமிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த படகுகள் குழாம் மற்றும் மாமல்லபுரம் தங்கும் விதி ஆகியவற்றில் அமைச்சர் திரு. வெல்லமண்டி என். நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் ஜெயலலிதா

750- யூனிட் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விசைத்தறியாளர்கள் நன்றி

750- யூனிட் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விசைத்தறியாளர்கள் நன்றி

சனி, ஜூன் 04,2016, விசைத்தறி நெசவாளர்களுக்கு 750- யூனிட் இலவச மின்சாரம் என்றும், வீடுகளுக்கு 100-யூனிட் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில்,திருப்பூர், பல்லடம், சோமனூர், அவினாசி, காங்கேயம், மங்கலம், ஆகிய பகுதிகளில் சுமார் 2-லட்சம் விசைத்தறி தொழிற்கூடங்கள் உள்ளன. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக P.K. வைரமுத்து பொறுப்பேற்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக P.K. வைரமுத்து பொறுப்பேற்பு

சனி, ஜூன் 04,2016, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட திரு.P.K. வைரமுத்து நேற்று  பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.P.K. வைரமுத்து நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது கோவையை சேர்ந்த எழுத்தாளர் புகார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது கோவையை சேர்ந்த எழுத்தாளர் புகார்

சனி, ஜூன் 04,2016, திருவள்ளுவர் பற்றி தான் எழுதிய நூலின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக கோவையை சேர்ந்த எழுத்தாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் வெங்கடாசலம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2013ம் ஆண்டு திருவள்ளுவரின் அரசியல் பொருளாதார கொள்கை என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளதாகவும், அரசு நூலகத்தில் வைக்க ஒப்புதலும்

கிருஷ்ணகிரி விபத்தில் பலியான குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

கிருஷ்ணகிரி விபத்தில் பலியான குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

சனி, ஜூன் 04,2016, ஓசூர் அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலை- மேலுமலை, குருபரப்பள்ளி என்ற இடத்தில் ஓசூரிலிருந்து