தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால்,துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தேர்வு

தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால்,துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் இன்று தேர்வு

வெள்ளி, ஜூன் 03,2016, தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழக சட்டசபையில் மே 25–ந் தேதி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜூன் 3–ந் தேதியன்று (இன்று) காலை 10 மணிக்கு அவை கூடுகிறது. அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ஜூன் 2–ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு சமர்ப்பிக்க வேண்டும் என்று

காயிதே மில்லத் 121-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மரியாதை

காயிதே மில்லத் 121-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மரியாதை

வெள்ளி, ஜூன் 03,2016, சென்னை, 121-வது பிறந்தநாளை முன்னிட்டும் வரும் 5-ந்தேதி காயிதே மில்லத் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அ.தி.முக. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, 5.6.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில், சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நினைவிடத்தில், அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும்,

முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம : தலைமை செயலாளர் உத்தரவு

முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம : தலைமை செயலாளர் உத்தரவு

வெள்ளி, ஜூன் 03,2016, முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வியாழக்கிழமை பிறப்பித்தார்.  முதல்வரின் கூடுதல் செயலராக இருந்த இன்னொசென்ட் திவ்யா விடுப்பில் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, முதல்வரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஜெ.கணேஷ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இணை இயக்குநராக உள்ளார்.  இதேபோல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக திருமயம்

ஜூன் 6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

ஜூன்  6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி, ஜூன் 03,2016, சென்னை: அண்மையில் நிறைவடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, வருகிற 6 ஆம் தேதி தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற 6 ஆம் தேதி

விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் : தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, ஜூன் 03,2016, சென்னை : கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும். இதற்காக நேரடி கொள்முதல் மையங்கள் துவங்கப்படும் என்றும், கொள்முதலுக்கு தேவையான 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் கொப்பரை தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டிய 1 சதவிகித சந்தை கட்டணம், 5 சதவிகித மதிப்பு கூட்டு வரி ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள்

ரமலான் நோன்புக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரமலான் நோன்புக்காக 3000 பள்ளிவாசல்களுக்கு 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 03,2016, ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:  நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்குத் தேவையான மொத்த அனுமதியை வழங்க கடந்த 2001-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தேன்.  அதன்படி, பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மூலம் மூன்று மாதங்களில் 3673 பேர் பயன் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மூலம் மூன்று மாதங்களில் 3673 பேர் பயன் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

வியாழன் , ஜூன் 02,2016, சென்னை: கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இதுவரை 3673 பேர் பயனடைந்துள்ளனர். பல தனியார் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை திட்டம் (Master Health Check up) செயல் முறையில் உள்ளது. இந்த நவீன வசதிகளை ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெற முடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தனியார் ஆய்வகங்களுக்கு மேலாக சென்னை