முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் கேட்ட தி.மு.க. கூட்டுறவு சங்க தலைவர்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் கேட்ட தி.மு.க. கூட்டுறவு சங்க தலைவர்

செவ்வாய், மே 31,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடியைப் பெற விவசாயிகளிடம் 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக, தி.மு.க.வைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தாம் வெளியிட்ட அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்,

சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற வாகன சோதனை : போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற வாகன சோதனை : போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

செவ்வாய், மே 31,2016, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், சென்னை தனியார் பள்ளியில் நடைபெற்ற வாகனங்களுக்கான ஆய்வை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் பள்ளியில், வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.  அங்கு 80  வாகனங்களில் ஆய்வு செய்த அவர், பள்ளி வாகனங்களில் வேக கட்டுபாட்டு கருவி, தீயணைப்பான், அவசர கால வழி,

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழக வீரருக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி : குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது விபத்தில் பலியான தமிழக வீரருக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி : குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

செவ்வாய், மே 31,2016, அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமசாமியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போதிநாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமசாமி எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 19-ம் தேதி உயிரிழந்ததாகக் குறிப்பிட்டு, ராணுவ வீரர் ராமசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள

தள்ளாடும் கட்சி திமுக தான் அதிமுக இல்லை : கருணாநிதிக்கு மேயர் துரைசாமி பதிலடி

தள்ளாடும் கட்சி திமுக தான் அதிமுக இல்லை : கருணாநிதிக்கு மேயர் துரைசாமி பதிலடி

செவ்வாய், மே 31,2016, சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்துள்ளது சரித்திர சாதனை என்று பாராட்டிய சென்னை மேயர் சைதை துரைசாமி,அரசியலில் தள்ளாட்டம் என்பது தி.மு.க. கட்சிக்குத் தானே தவிர அ.தி.மு.க.விற்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.   சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது.அதில் அவர் பேசுகையில், “1962-1967-க்குப் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஒரு புதிய ஃபார்முலாவை உருவாக்கி, 234 தொகுதிகளிலும் இரட்டை

அரசின் அனைத்து திட்டங்களும், கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் : செய்தி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வேண்டுகோள்

அரசின் அனைத்து திட்டங்களும், கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் : செய்தி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வேண்டுகோள்

செவ்வாய், மே 31,2016, அரசு அறிவிக்கிற அனைத்து திட்டங்களும், கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு, முழு அளவில் சென்றடைய, செய்தி மக்கள் தொடர்புத் துறை பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்’ என, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு செய்தார். கூட்டத்தில், செய்தித் துறை செயலர் உதயசந்திரன், இயக்குனர் குமரகுருபரன், கூடுதல் இயக்குனர்கள் எழிலகன், தானப்பா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நாளை பள்ளிகள் திறப்பு :விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாளை பள்ளிகள் திறப்பு :விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

செவ்வாய், மே 31,2016, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜுன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலதா அறிவுறுத்தலின் பேரில், பள்ளிகள் திறக்கும் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அனைத்து பள்ளிகளும் திறக்கும் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட