முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு

செவ்வாய், மே 31,2016, தனியாக தேர்தலை சந்தித்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்தது சரித்திர சாதனை என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மேயர் திரு. சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க., நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் அவிழ்த்துவிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களையும், இட்டுக்கட்டிய அவதூறுகளையும் தகர்த்தெறிந்து மகத்தான வெற்றி

புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், மே 31,2016, சென்னை:தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவதற்காக புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் உள்ள மின்சார நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தை மிகை மின் மாநிலமாக மாற்றுவதற்காக விரைந்து செயல்படுத்த அனைத்து மின் திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேணடும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரித்து,

குமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தி உயிரிழந்த பூங்கா ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

குமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தி உயிரிழந்த பூங்கா ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , மே 30,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில் மான் கொம்பு குத்தியதில் பல்லுயிர் பூங்கா ஊழியர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், புலியூர்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவில் மான்களுக்கு உணவு அளிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம்,

கேரளாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

கேரளாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , மே 30,2016, கேரளாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அம்மாநில முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பினராயி விஜயனுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ”கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் இடது ஜனநாயக