மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடை : பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் எடுத்துவர தடை : பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

திங்கள் , மே 30,2016, பள்ளி மாணவ-மாணவிகள் பஸ்களில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும், பள்ளிக்கூடத்திற்கு செல்போன்களை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்கென, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து

புகை பிடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும், 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புகை பிடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும், 8 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

திங்கள் , மே 30,2016, புதுக்கோட்டை : புகை பிடிக்கும் பழக்கத்தால் 8 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டு அவர் பேசியது: உலகில் 120 மில்லியன் மக்கள் புகைக்கு அடிமையாகி உள்ளனர். அதில், இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் ஆயுட்காலம் பாதியாகக்

ஜூலை 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி அறிமுகம்

ஜூலை 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி அறிமுகம்

திங்கள் , மே 30,2016, ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி முதல்கட்டமாக ஜூலை 1-ந் தேதி முதல் 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் முதல் வாரத்திற்கு பின்னர் பொருட்கள் வழங்கப்படுவதில்லை, ஒரு மாதம் கூட நுகர்வோர் பொருட்களை முழுமையாக பெற முடிவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவும், ரேஷன் கடைகளில்

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கியதில் மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகரின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்கியதில் மரணமடைந்த அ.தி.மு.க. பிரமுகரின் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

திங்கள் , மே 30,2016, கேரள மாநிலம், உடும்பன்சோழா சட்டமன்றத் தொகுதி, மஞ்சப்பட்டியைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் திரு. ஆர். சுந்தரம் என்பவரை கம்யூனிஸ்ட் கட்சியினர், கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தியதால் மரணமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. சுந்தரத்தின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியுதவியாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கேரள மாநிலம், உடும்பன்சோழா சட்டமன்றத் தொகுதி, மஞ்சப்பட்டியைச் சேர்ந்த கழக

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

திங்கள் , மே 30,2016, சென்னை: கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, தமிழகத்தில் பறவை  காய்ச்சல் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மாநில எல்லையில் 24 மணி நேர  கண்காணிப்பு பணி, மற்றும் தடுப்பு சோதனை சாவடி அமைக்கபட்டு கிருமி நீக்க மருந்து தெளிக்கும் பணிகள் நடைப்பெற்றன. இவற்றை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி  ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத் கிராமத்தில் ரமேஷ்

தூத்துக்குடியில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் கட்டணமில்லா மருத்துவ முகாம் : ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்

தூத்துக்குடியில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் கட்டணமில்லா மருத்துவ முகாம் : ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்

ஞாயிறு, மே 29,2016, தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணியில், அ.இ.அ.தி.மு.க கிளைக் கழகம் சார்பில் கட்டணமில்லா மருத்துவ முகாமினை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார். முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், உடல் பரிசோதனை, உள்ளிட்ட சிகிச்சைகள் கட்டணமில்லாமல் அளிக்கப்பட்டதுடன், மருந்துகளும் வழங்கப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவர்கள் உரிய ஆலோசனைகள் வழங்கினர். இந்த முகாமில், ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஞாயிறு, மே 29,2016, ராமநாதபுரத்தில், விடுதலைப் போராட்ட வீரரும், சேதுபதி மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரரும், சேதுபதி மன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி திருவுருவச் சிலைக்கு, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், திரு.அன்வர் ராஜா எம்.பி., மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஆர்.தர்மர் மற்றும்