அமைச்சராக பதவியேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

அமைச்சராக பதவியேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

ஞாயிறு, மே 29,2016, ஸ்ரீவில்லிபுத்தூர்: அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்த மாவட்டத்திற்கு வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சனிக்கிழமை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையான ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அழகாபுரியில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்,

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைப்பு

ஞாயிறு, மே 29,2016, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபரிடம் வக்ஃப் வாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் வக்ஃப் வாரியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, வக்ஃப் வாரிய பொறுப்பானது தொழிலாளர் நலத் துறை அமைச்சரான நீலோபரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தொழிலாளர் நலத் துறை பொறுப்பையும் தொடர்ந்து வகிப்பார் என்று தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

பயிர்கடன் ரத்து, 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு விவசாயிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் நன்றி

பயிர்கடன் ரத்து, 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு   விவசாயிகள், நெசவாளர்கள், பொதுமக்கள் நன்றி

ஞாயிறு, மே 29,2016, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் ரத்து, வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வழங்கும் உத்தரவு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டு, இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதற்கு , விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக 6-வது முறையாக கடந்த 23-ம் தேதி பதவியேற்றுக் கொண்ட, முதலமைச்சர் ஜெயலலிதா, முதல் பணியாக, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முக்கியத் திட்டங்களுக்கு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கிணங்க, வெற்றி பெற்ற மற்றும் வெற்றிவாய்ப்பை இழந்த அ.தி.மு.க வேட்பாளர்கள் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கிணங்க, வெற்றி பெற்ற மற்றும் வெற்றிவாய்ப்பை இழந்த அ.தி.மு.க வேட்பாளர்கள் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி

சனிக்கிழமை, மே 28, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மற்றும் வெற்றி வாய்ப்பை இழந்த கழக வேட்பாளர்கள், தங்களுடைய தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வியத்தகு வெற்றியை வழங்கியுள்ள தமிழக மக்களின் இணையில்லா அன்பிற்கும், பேராதரவிற்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் மாற்றம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் மாற்றம்

சனி, மே 28,2016, சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் மாற்றப்படுகிறது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஜூன் 13ம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும், இவ்விரு தொகுதிகளிலும் ஜூன் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடத்த

வாழ்த்துக் கடிதம் அனுப்பிய இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

வாழ்த்துக் கடிதம் அனுப்பிய இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

சனி, மே 28,2016, சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தமது வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்க்கிறேன். தமிழ்