சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் : டோக்கன்கள் வழங்கப்படுகிறது

சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்தில் இலவச பயணம் : டோக்கன்கள் வழங்கப்படுகிறது

வெள்ளி, மே 27,2016, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 24-ந் தேதி சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் புகைப்பட அடையாள அட்டை மற்றும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணமில்லா பயணத்திற்கான டோக் கன்கள் வழங்கப்பட்டது. தற்போது, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் டோக்கன் பெற்றவர்கள்

நூறு யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம், மின்சார கட்டணம் சீரமைப்பு வாரியம் விளக்கம் : பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்

நூறு யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம், மின்சார கட்டணம் சீரமைப்பு வாரியம் விளக்கம் : பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்

வெள்ளி, மே 27,2016, நூறு யூனிட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திட்டத்தி்ன் அடிப்படையில் மின்கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு 100 யூனிட் மின்சாரம், கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். சொன்னதைச் செய்வோம் என முதலமைச்சர் வாக்குறுதி வழங்கியதற்கேற்ப, பதவியேற்றதும், தாம் கையெழுத்திட்ட முதல் 5 கோப்புகளில் ஒன்றாக மின்சாரக் கட்டணம் குறித்த வாக்குறுதியை

அ.தி.மு.க ராஜ்யசபை வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அ.தி.மு.க ராஜ்யசபை வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெள்ளி, மே 27,2016, சென்னை:அ.தி.முக சார்பில் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வைத்திலிங்கம் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் நவநீதக்கிருஷ்ணன், குமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரை

மேற்குவங்க முதல்வராக பதவியேற்கும் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

மேற்குவங்க முதல்வராக பதவியேற்கும் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கடிதம்

வெள்ளி, மே 27,2016, 2-வது முறையாக மேற்குவங்க முதல்வராக இன்று  பதவியேற்க்கும் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தமைக்காக நன்றி தெரிவித்து மம்தாவுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர்  ஜெயலலிதா, மேற்குவங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மம்தா பானர்ஜி, இன்று முதலமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனிப்பட்ட முறையில் தமக்கு அழைப்பு விடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மம்தா

தேர்தலில் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி : மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றுவேன் என்றும் அறிவிப்பு

தேர்தலில் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி : மக்களுக்கு அரும் பணிகளை தொய்வின்றி ஆற்றுவேன் என்றும் அறிவிப்பு

வெள்ளி, மே 27,2016, சென்னை:நடந்து முடிந்த சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வியத்தகு  வெற்றியை தந்து தம்மை மீண்டும் முதல்வராக்கிய தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.., நடைபெற்று முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கி உள்ளனர். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற

அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

வியாழன் , மே 26,2016, திருவள்ளூர், சென்னை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. R. ராஜன், தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. T.K. சரவணன், கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர்