இனி செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தலாம் : அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்பு

இனி செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தலாம் : அமைச்சர் தங்கமணி புதிய அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை,ஜூன் 20, 2017,  சென்னை : செல்போன் வழியாக மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டபேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று எரிசக்தித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியிட்ட புதிய அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது :- விவசாய பயன்பாட்டிற்கான சூரியமின் சக்தி நீர் பம்பு மாதிரி திட்டம் மாநிலம் முழுவதும் 5, 7.5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 எண்ணிக்கை சூரிய

சென்னை பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை,ஜூன் 20, 2017,  சென்னை : சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் கட்டப்படும் பள்ளிக்கல்வி இயக்கக கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் ரூ 33 கோடி செலவில் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கென ஒரு லட்சம் சதுர அடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படும். அதற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடம்  என்று பெயர் வைக்கப்படும் என்றும்  சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலிதா போல் தைரியமுடன் செயல் பட்டால் 3 ஆண்டுகளில் தி.மு.க. காணாமல் போகும் : பொன்.ராதாகிருஷ்ணன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலிதா போல் தைரியமுடன் செயல் பட்டால் 3 ஆண்டுகளில் தி.மு.க. காணாமல் போகும் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை,  வேலூர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்தைய முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் தைரியமாக செயல்பட வேண்டும் அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும் என மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை எண்ணூரில் உள்ள காமராஜர்

தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது : புகழேந்தி பேட்டி

தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது : புகழேந்தி பேட்டி

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை,  மதுரை : டி.டி.வி.தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது என்று கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறினார். கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா அணி) செயலாளர் வ.புகழேந்தி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறை சென்றபோது தமிழகம் முழுவதும் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்கு ஒருங்கிணைப் பாளர்களாக மதுரையை சேர்ந்த நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை இன்று சந்தித்தேன். அப்போது அவர்கள் சில

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை,  திருநெல்வேலி : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மமுடிச்சு அவிழும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதலமைச்சரும்,அ.தி. மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். திருநெல்வேலியில் அ.தி.மு.க.,வின் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் சார்பில் எம்.ஜி.ஆர்.,நுாற்றாண்டு விழா,கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. பி.எச்.பால்மனோஜ்பாண்டியன் தலைமை வகித்தார். வாசுதேவநல்லுார் எம்.எல்.ஏ.,மனோகரன் வரவேற்றார். பொன்னையன்,பி.எச்.பாண்டியன், செம்மலை, மைத்ரேயன், முனுசாமி, மாபா பாண்டியராஜன், ராஜ கண்ணப்பன், பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க நிலைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது : தம்பிதுரை

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க நிலைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது  : தம்பிதுரை

ஜூன் 18, 2017,ஞாயிற்றுகிழமை,  சென்னை : தமிழகத்தில் ஆட்சியை கலைக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்ற அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்ததாக விளக்கம் அளித்தார். தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆட்சியை கலைத்தால்,

தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 18, 2017,ஞாயிற்றுகிழமை, ஈரோடு : அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், 3 மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கப்படும் நடைமுறையை மாற்றி, இனி மாத ஊதியமாக வழங்கப்படும் என்று கூறினார்.