தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் : முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயார் : முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், மே 24,2016, தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தி.மு.க. பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக திரு. ஸ்டாலினையோ, தி.மு.க.வையோ அவமரியாதை செய்யும் எண்ணம் ஏதும் இல்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.க.ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் முதலமைச்சருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்றி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் முதலமைச்சருக்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நன்றி

செவ்வாய், மே 24,2016, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, முக்கிய 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டதற்கு விவசாயிகள், நெசவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வெகுவாக வரவேற்றுள்ளதுடன், முதலமைச்சருக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பூரண மதுவிலக்கைஎட்டும் நோக்கில், முதலமைச்சர்  ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கையை பெண்கள் மிகவும் வரவேற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற சரித்திர சாதனை வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் முதலமைச்சராக தவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தேர்தல்

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு  தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய், மே 24,2016, முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.  இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:  குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.  வாழ்த்துக்

பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

செவ்வாய், மே 24,2016, முதல் முறையாக ஒசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி. பாலகிருஷ்ணாரெட்டி அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றிபெற்ற ஒசூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஒசூர் ஒன்றியச் செயலராகப் பதவி வகித்து வரும் பி.பாலகிருஷ்ணாரெட்டி போட்டியிட்டார். இவர் ஒசூரில் 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த கே.கோபிநாத்தை 28,852 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் கோட்டையைத்

500 மதுக்கடைகள் மூடல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு சசிபெருமாளின் குடும்பத்தினர் வரவேற்பு

500 மதுக்கடைகள் மூடல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு சசிபெருமாளின் குடும்பத்தினர் வரவேற்பு

செவ்வாய், மே 24,2016, ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில், 500 மதுக்கடைகள் மூடல், 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்,விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.  மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, 500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட அறிவிப்புகளை மறைந்த சசிபெருமாளின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சசிபெருமாளின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

பிளக்ஸ் பேனர்கள் இல்லாத முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா : ஆடம்பரம் தவிர்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு

பிளக்ஸ் பேனர்கள் இல்லாத முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா : ஆடம்பரம் தவிர்க்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு

செவ்வாய், மே 24,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா சென்னை நகர் முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவை இல்லாமல் எளிமையாக நடைபெற்றற்கு மாநகர மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா, பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் இன்றி, எளிமையாக நடைபெற்று முடிந்தது.  போயஸ் கார்டனில் இருந்து, பதவியேற்பு விழா நடந்த சென்னை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் அதிமுக கட்சி கொடிகள் தவிர்த்து, எந்த பேனரையும் பார்க்க முடியவில்லை.  போக்குவரத்துக்கு

500 டாஸ்மாக் கடைகள் மூடும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு

500 டாஸ்மாக் கடைகள் மூடும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுவிற்கு  தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு

செவ்வாய், மே 24,2016, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதற்கும் மதுபானக் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படுவதற்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  சென்னை தி.நகரில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி  தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி,100 யூனிட் மின்சார கட்டணம் ரத்து, 500 டாஸ்மாக் சில்லரை

முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா : பொதுமக்கள் மகிழ்ச்சி

முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா : பொதுமக்கள் மகிழ்ச்சி

செவ்வாய், மே 24,2016, ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில், 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அதன் மூலம் மக்களுக்கு தாம் நன்றி செலுத்த உள்ளதாகக் கூறிய முதல்வர் ஜெயலலிதா, பதவியேற்றதும் அதனை சொன்னபடி செய்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ்