முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாகூர் தர்கா ஆதீனம் எஸ்.சையது முகம்மது கலிபா சாஹிப் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாகூர் தர்கா ஆதீனம் எஸ்.சையது முகம்மது கலிபா சாஹிப் வாழ்த்து

சனி, மே 21,2016, தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு நாகூர் தர்காவின் பரம்பரை ஆதீனம் எஸ்.சையது முகம்மது கலிபா சாஹிப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி:  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைதி, வளம், வளர்ச்சி என்று களமிறங்கி அதிமுக வெற்றி கண்டது. இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களால் தமிழக முதல்வர், மக்களுக்காக தமிழக முதல்வர் என்று களமிறங்கி வெற்றி கண்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாட்டு திட்டங்கள் பரவலாக அடித்தட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.க தலைவர் அத்வானி வாழ்த்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.க தலைவர் அத்வானி வாழ்த்து

சனி, மே 21,2016, தமிழ்நாட்டில் நடைபெற்ற 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றுள்ளதையொட்டி, முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று  மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள். தனக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியைத் தெரிவித்து கொண்டதுடன், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொது தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி: மும்பையில் அ.தி.மு.க.வினர் உற்சாக கொண்டாட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி: மும்பையில் அ.தி.மு.க.வினர் உற்சாக கொண்டாட்டம்

சனி, மே 21,2016, தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை மும்பையில் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அ.தி.மு.க. வெற்றி தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கட்சி தனிபெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன் ஆடிப்பாடி கொண்டாடினர். மேலும் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டனர். வெற்றி கொண்டாட்டம் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாநில செயலாளர்

மே 23- இல் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா: ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் இன்று கடிதம்

மே 23- இல் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா: ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் இன்று கடிதம்

சனி, மே 21,2016, சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (மே 20) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (மே 23) முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 25-க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்பர் என்று தெரிகிறது.  தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 134 தொகுதிகள் கிடைத்துள்ளன. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதாவைத்

அ.இ.அ.தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றி முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை : “தினமணி” நாளேடு பாராட்டு

அ.இ.அ.தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றி முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சரித்திர சாதனை : “தினமணி” நாளேடு பாராட்டு

சனி, மே 21,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றியை பெரும்பாலான நாளேடுகள் வரவேற்று பாராட்டியுள்ளன. இந்த வெற்றி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனை என வர்ணித்து “தினமணி” நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. இதுவரை தமிழகத்தில் வேறு எந்தக்கட்சியும் செய்திராத அளவுக்கு தி.மு.க. விளம்பரங்களை வெளியிட்டது. அ.இ.அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள், தி.மு.க.வை மாற்றாக கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும், ஊடகங்கள் மூலம் ஒரு

நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது மக்கள் நலக் கூட்டணி

நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது  மக்கள் நலக் கூட்டணி

வெள்ளி, மே 20,2016, நோட்டாவை விடக் குறைவான வாக்குகளே மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது என்று தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக-அண்ணா திமுக கட்சிகளுக்கு அடுத்து களம் இறங்கியது மக்கள் நலக் கூட்டணி. இதில் கூட்டணி அமைத்த தேமுதிக தவிர மற்ற கட்சிகள் நோட்டா வாக்குகளை விட மிகக் குறைவாகப் பெற்றுள்ளன. நோட்டா வாக்குகள் 1.3 சதவிகிதம் என்று இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 0.8 சதவிகிதம். தமாகாவுக்கு கிடைத்த வாக்குகள் 0.5

திருவாடானை தொகுதியில் தோல்வியடைந்த தி.மு.க வினர் வன்முறை : அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல்

திருவாடானை தொகுதியில் தோல்வியடைந்த தி.மு.க வினர் வன்முறை : அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல்

வெள்ளி, மே 20,2016, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். அ.இ.அ.தி.மு.கவினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் கழக பிரமுகரின் கார் சேதமடைந்தது. திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க தோழமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தார். இந்தத் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத தி.மு.க.வினர், திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஓம்சக்தி நகர் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டனர். அ.இ.அ.தி.மு.க.வினர் மீது