தனி தொகுதி மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில் இரு மடங்கு வெற்றி பெற்று அதிமுக சாதனை

தனி தொகுதி மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில் இரு மடங்கு வெற்றி பெற்று அதிமுக சாதனை

வெள்ளி, மே 20,2016, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அதிமுக இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது. இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட, 44 தனி தொகுதிகளும், மலைவாழ் பழங்குடியினர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகள். தனி தொகுதிகள், 44-இல்,

தஞ்சை, அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு தள்ளி வைப்பு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு தள்ளி வைப்பு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வெள்ளி, மே 20,2016, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் 23ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில்,

முதலமைச்சர் ஜெயலலிதா பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை

முதலமைச்சர் ஜெயலலிதா பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை

வெள்ளி, மே 20,2016, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, சென்னையில் இன்று முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். முதலில், பெரியார் சிலைக்கு வந்த ஜெயலலிதா, அங்கு அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து

அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக முதல்வர் ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு

அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக முதல்வர் ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு

வெள்ளி, மே 20,2016, சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டப் பேரவைக் குழு உறுப்பினராக, அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வாழ்த்து!

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வாழ்த்து!

வெள்ளி, மே 20,2016, தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 6-வது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம். தமிழக  சட்டசபைக்கான தேர்தலில் 6வது முறையாக தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்