‘ஆண்டவனை நம்பி மக்களிடம் கூட்டணி வைத்தேன் : மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா உருக்கம்

‘ஆண்டவனை நம்பி மக்களிடம் கூட்டணி வைத்தேன் : மக்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா உருக்கம்

வெள்ளி, மே 20,2016, ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் ஆண்டவனை நம்பி மக்களிடம் கூட்டணி வைத்தேன். தமிழக மக்கள் எனக்கு அமோக வெற்றியை, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடி தந்திருக்கிறார்கள்’’ தொடர் வெற்றியை அளித்த மக்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார்.  சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சென்னை போயஸ் தோட்டத்தில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:  தேர்தலில் அதிமுகவுக்கு அமோக வெற்றியை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து

வெள்ளி, மே 20,2016, தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்க்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில்

அ.தி.மு.க வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அ.தி.மு.க வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளி, மே 20,2016, சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையும், முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியும் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டங்களால் விழாக் கோலம் பூண்டது.  சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஓரிரு மணி நேரத்திலேயே அதிமுக முன்னிலை பெற்று வந்தது.  இதையடுத்து, போயஸ் கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடினர். இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது. காலை 10 மணியளவில் அதிமுக வெற்றி பெற்று விடும்

மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி பதவி ஏற்கிறார்

மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா  23–ந்தேதி பதவி ஏற்கிறார்

வெள்ளி, மே 20,2016, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது. 1984–க்கு பிறகு ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததில்லை என்ற நிலையை மாற்றி, மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க.