கொசஸ்தலை துணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் : சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொசஸ்தலை துணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் : சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஜூன் 17,2017 ,சனிக்கிழமை,  சென்னை : கொசஸ்தலை துணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்துங்கள் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு இடையே கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான கொசா ஆற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டம், நிலவயல், கர்வெட் நகர் மண்டல் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசின் நீர்பாசனத்துறை

பள்ளிக்கல்வித்துறையில் 37 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன் : பல்வேறு கட்சிகளும், கல்வியாளர்களும் வரவேற்பு

பள்ளிக்கல்வித்துறையில் 37 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன் : பல்வேறு கட்சிகளும், கல்வியாளர்களும் வரவேற்பு

ஜூன் 16, 2017,வெள்ளி கிழமை,  சென்னை : அரசு பள்ளிகளில், உயர் தரமான கல்வியை கற்பிக்கவும், அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, நவீன தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப தயார்படுத்தவும் அதிரடி நடவடிக்கையாக 37 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதற்கு, பல்வேறு கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அவர், ‘ஐந்து

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி,தீபா அணியினர் தேர்தல் கமி‌ஷனிடம் பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி,தீபா அணியினர் தேர்தல் கமி‌ஷனிடம் பிரமாண பத்திரங்கள் தாக்கல்

ஜூன் 16, 2017,வெள்ளி கிழமை,  புதுடெல்லி : இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி, தீபா அணியினரும் தேர்தல் கமி‌ஷனிடம் 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை நேற்று தாக்கல் செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்து உள்ளது. இதன் காரணமாக, யார் உண்மையான அ.தி.மு.க.? என்பதை நிரூபித்து சின்னத்தை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதற்காக தேர்தல் கமி‌ஷன் உத்தரவுக்கு

110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூன் 16, 2017,வெள்ளி கிழமை,  சென்னை : விதி எண் 110-ன் கீழ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றும் என்று நேற்று சட்டசபையில் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார். இது குறித்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து ஆற்றிய உரை மறைந்த முதல்வர் 

பள்ளிகளில் மரக்கன்றுகளை பராமரிக்க ரூ.1 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு : அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

பள்ளிகளில் மரக்கன்றுகளை பராமரிக்க ரூ.1 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு : அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

ஜூன் 15, 2017,வியாழக்கிழமை, சென்னை : பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.1 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இறுதியாக அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்து பேசினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு பேசினார். அதன் விவரம் வருமாறு:- 32 வருவாய் மாவட்டங்களிலும், தேசிய பசுமைப்படை சூழல் மன்ற மாணவர்களுக்கு

டிடிவி தினகரனுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு

டிடிவி தினகரனுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு

ஜூன் 15, 2017,வியாழக்கிழமை, சென்னை : அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை மேலும் 2 எம்எல்ஏக்கள் சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்தனர். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி. தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கடந்த சில நாட்களாக சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதற்குப் பிறகு ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), பி.பெரியபுல்லான் (எ) செல்வம் (மேலூர்),