1984-க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்ற சரித்திரத்தை மாற்றிய முதல்வர் ஜெயலலிதா

1984-க்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்ற சரித்திரத்தை மாற்றிய முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி, மே 20,2016, தமிழ்நாட்டில் 1977 முதல் 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து எம்.ஜி.ஆர். சாதனை படைத்தார். 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தனது பதவிக்காலம் முடியும் முன்னே 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார். 1984-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தன. எந்த கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தியது கிடையாது.

39,545 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

39,545 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

வெள்ளி, மே 20,2016, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துசோழனைவிட 39,545 வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டார். இவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குண பாண்டியனின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வாக்கு

134 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது : மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார் முதல்வர் ஜெயலலிதா

134 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியது : மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார் முதல்வர் ஜெயலலிதா

வெள்ளி, மே 20,2016, தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் துவக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. முன்னணியில் இருந்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 6 முனைப்போட்டியில் தனித்து நின்று இந்த மகத்தான வெற்றியை சாதித்துள்ளது. இதையடுத்து 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. இன்று சென்னையில் சட்டமன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் , தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. விஜயகாந்த் தோல்வி அடைந்ததோடு 3வது

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி : தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி : தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி

வியாழன் , மே 19,2016, அ.தி.மு.க. வெற்றியை தொடர்ந்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்து உள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் (நம்மைச்) சேரும்ட என்ற இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

வியாழன் , மே 19,2016, தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கும் கடந்த மே 16 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 68 மையங்களில் வைத்து வாக்குப்பதிவு எண்ணும் நடைபெற்று வருகிறது. இதில், அண்மை நிலவரப்படி அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக 86 தொகுதிகளிலும் பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போதய