தமிழகம் முழுவதும் அதிமுக இதுவரையில் 42 சதவித வாக்குகளுடன் முன்னிலை

வியாழன் , மே 19,2016, தமிழகம் முழுவதும் அதிமுக இதுவரையில் 42 சதவித வாக்குகளுடன் முன்னிலை பெற்று உள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆளும் அதிமுகவே முன்னிலை பெற்று உள்ளது. மாற்று என்ற முழக்கத்துடன் வந்த மக்கள்நல கூட்டணி எந்தஒரு தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. அதிமுக 133 தொகுதிகளிலும், திமுக 81 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று உள்ளது. பாட்டாளி மக்கள்

ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மரணம் : பிரபாகரனின் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ திட்டம்

ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மரணம் : பிரபாகரனின் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ திட்டம்

வியாழன் , மே 19,2016, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக பிரபாகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலைதான் என்று கூறி, கடந்த 2012-ஆம் ஆண்டில் இது தொடர்பான வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு நெருக்கமானவராகவும், 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாகவும் கருதப்பட்ட சாதிக் பாட்சா கடந்த 2011-ஆம் ஆண்டில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

வியாழன் , மே 19,2016, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் புதன்கிழமை அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில், கடந்த ஏப்ரல் 30-இல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம்

தமிழகத்தில் இன்று 232 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை : முடிவு இன்று மதியம் தெரியும்

தமிழகத்தில் இன்று  232 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை : முடிவு  இன்று மதியம் தெரியும்

வியாழன் , மே 19,2016, தமிழகம் முழுவதும் 232 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 68 மையங்களில் நடைபெறுகிறது. இந்த பணியில் 13 ஆயிரத்து 592 மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 முனை போட்டி:- கடந்த 16-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக, 232 தொகுதிகளில் நடைப்பெற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை