அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் : தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தகவல்

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் : தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய், மே 17,2016, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அதில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிமுக – 139, திமுக – 78, பிற கட்சிகள் – 17. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும்

இரண்டு நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் : வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா பேட்டி

இரண்டு  நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் : வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா பேட்டி

செவ்வாய், மே 17,2016, இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள் மக்கள் தீர்ப்பு தெரியும் என்று வாக்களித்த பின் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல்வர் ஜெயலலிதா தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்தப்பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில்., இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள். மக்கள் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்று அவர் கூறினார். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வீடு போயஸ் தோட்டம்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்தது : 74 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்தது : 74 சதவீத வாக்குப்பதிவு

செவ்வாய், மே 17,2016, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு திங்கள்கிழமையன்று (மே 16) நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 78 சதவீத வாக்குகளும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீத வாக்குகளும் பதிவாகின.  கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெற்றுள்ள

தேர்தல் விதிமுறையை மீறிய கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு

தேர்தல் விதிமுறையை மீறிய கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு

திங்கள் , மே 16,2016, தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும் தேர்தல் பிரசார செய்திகளை ஒளிபரப்பியது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:- தங்கள் கட்சியினர் தேர்தல் பிரசார செய்திகளையும் தேர்தல் அறிக்கைகள் பற்றியும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பி வருகிறார்கள் என்று அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. தேர்தல் விதிகளின்படி