தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு வேண்டுகோள்

தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்பு வேண்டுகோள்

திங்கள் , மே 16,2016, அரசியலில் வெற்றிக்காக பெற்ற பிள்ளைகளையே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுவதையும், ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும் களங்கப்படுத்தும் தீய சக்திகளின் முயற்சிகளை கவனமாக இருந்து முறியடிக்க வேண்டும் என்று தமிழக வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை  எனதருமை தமிழக வாக்காளப் பெருமக்களே!! தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளைப்

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:விளக்கம் அளித்தது அதிமுக, அவகாசம் கேட்கிறது திமுக

திங்கள் , மே 16,2016, தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது. அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை

அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சையிலும் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் அதிரடி

அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சையிலும் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் அதிரடி

திங்கள் , மே 16,2016, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று  நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.   இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ரெங்கசாமியும், திமுக சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    பணப்பட்டுவடா புகாரால் கரூர்

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்;  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

திங்கள் , மே 16,2016, 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், தே.மு.தி.க- மக்கள் நல கூட்டணி தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவுகிறது. 234 தொகுதிகளிலும் மொத்தம்

ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் N.R. சிவப்பிரகாசம்,அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் N.R. சிவப்பிரகாசம்,அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, மே 15,2016, ஆயங்குடி ஊராட்சிக் கழகச் செயலாளர் திரு. N.R. சிவப்பிரகாசம், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி

தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

ஞாயிறு, மே 15,2016, தமிழக மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பெற்றிருக்கின்ற அற்புதமான வாய்ப்பு தான் தேர்தலும், வாக்குப் பதிவும். தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வது ஒரு புனிதக் கடமை. ஜனநாயகத்தைக் காப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும்