அ.தி.மு.க. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்V.சரவணனின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

அ.தி.மு.க. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்V.சரவணனின் தாயார்  மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

ஞாயிறு, மே 15,2016, அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் V.சரவணனின் தாயார் திருமதி ஜானகியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் V.சரவணனின் தாயார் திருமதி ஜானகியம்மாள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். தாயாரை இழந்து வாடும் நடிகர் சரவணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் அதிரடி

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம் அதிரடி

ஞாயிறு, மே 15,2016, அரவக்குறிச்சி தொகுதியில் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 25 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 234 தொகுதிகளுக்கு உட்பட்ட 66,007 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் கரூர்

தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது, நாளை வாக்குப்பதிவு : ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது, நாளை வாக்குப்பதிவு : ஏற்பாடுகள் தீவிரம்

ஞாயிறு, மே 15,2016, தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு  நாளை  (மே 16) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.  தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் தயாராக உள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.  இதனிடையே, கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை (மே 14) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்த தி.மு.க.வினர் கையும்களவுமாக பிடிப்பட்டனர் – ஒருவர் கைது – தி.மு.க. சின்னத்துடன் பணம் வைத்திருந்த கவர்கள் பறிமுதல்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்த தி.மு.க.வினர் கையும்களவுமாக பிடிப்பட்டனர் – ஒருவர் கைது – தி.மு.க. சின்னத்துடன் பணம் வைத்திருந்த கவர்கள் பறிமுதல்

சனி, மே 14,2016, தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அணி 162 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என குமுதம் ரிப்போர்டர் வார இதழ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரம், அ.இ.அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அ.இ.அதி.மு.க தேர்தல் அறிக்கையினை கடந்த 5-ம் தேதி பெருந்துறையில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு பொதுமக்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. மேலும்,

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் : பிரதமருக்குமுதல்வர் கடிதம்

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் : பிரதமருக்குமுதல்வர் கடிதம்

சனி, மே 14,2016, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட இலங்கை அரசு தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதற்கு முதலமைச்சர்  ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தேவாலயத்தில் தமிழக மீனவர்களுக்கும் உரிமை உள்ளது என்றும், எனவே, தமிழக மீனவர்களுடன் கலந்து ஆலோசித்து அதன் பின்னரே இந்தியாவும் – இலங்கையும் ஒன்றிணைந்து இந்த தேவாலயத்தை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.