அ.தி.மு.க. 190 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் : தினபூமி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

அ.தி.மு.க. 190 தொகுதிகளில்  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் : தினபூமி நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

சனி, மே 14,2016, தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 190தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தினபூமி நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு 40 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வெறும் 4இடங்களே கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது அ.தி.முக.விற்கே 48.6சதவீத வாக்குகளும் தி.மு.கவிற்கு 27.4சதவீதமும் மக்கள் நல கூட்டணிக்கு 8.9சதவீதமும் பா.ஜ.க.விற்கு 3.8சதவீதமும் பா.ம.கவிற்கு 4.5சதவீதமும் நாம் தமிழர் கட்சிக்கு 1.9சதவீதமும் 

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி’ நெல்லை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கு

‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி’ நெல்லை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா தாக்கு

வெள்ளி, மே 13,2016, ‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி‘ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிரசாரம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 16 தொகுதிகளில் அவர் வேன் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார். நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர்

காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக-மானியம் வழங்கியது அ.தி.மு.க : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக-மானியம் வழங்கியது அ.தி.மு.க : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, மே 13,2016, காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக. விலை உயர்வை மக்கள் தலையில் திணிக்காமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கியது அ.தி.மு.க. தான் என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாணடமான தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:- 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, அனைத்து பிரிவினெல்வரின் நலனுக்காகவும், விவசாயம், ஜவுளித் தொழில், சேவைத்

வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டி அடியுங்கள் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டி அடியுங்கள் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, மே 13,2016, வாக்கு கேட்டு வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணியை விரட்டியடியுங்கள் என, அதிமுக பொதுச் செயலரும் முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.  இரு கட்சிகளும் தமிழகத்துக்கு அளித்த தீமைகளைப் பட்டியலிட்டு, திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக கடந்த 2011-இல் அதிமுகவுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள். 2011-இல் 54 தலைப்புகளில் வாக்குறுதி அளித்து தேர்தல்

மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

வெள்ளி, மே 13,2016, திமுக தலைவர் கருணாநிதி தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பதாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பாளையங்கோட்டையில் இன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும்,முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களின் நலனுக்காக உழைப்பவர் என்றும், தான் மட்டுமே மக்களின் நலனை கருத்தில் கொண்டு உழைத்து வருவதாகவும்