தும்மனட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைக்கப்படும் : ஊட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் உறுதி

தும்மனட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைக்கப்படும் : ஊட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் உறுதி

ஞாயிறு, மே 08,2016, தேயிலை விவசாயிகளின் நலன் கருதி தும்மனட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அ.தி.மு.க வேட்பாளர் கப்பச்சி வினோத் உறுதி அளித்தார். பச்சை தேயிலைக்கு மானியம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் எப்பநாடு, தூனேரி ஊராட்சி பகுதிகளில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:– நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வினியோகம் செய்யும் விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு

பழனி அருகே வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு

பழனி அருகே வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக திமுக எம்.எல்.ஏ.  மீது வழக்கு

ஞாயிறு, மே 08,2016, பழனி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ. அர.சக்கரபாணி உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கார்களில் வெள்ளிக்கிழமை இரவு மானூருக்கு வந்தனர். இவர்கள் அங்குள்ள வங்கி அருகே நின்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இதையறித்த விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட்

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

ஞாயிறு, மே 08,2016, தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சென்னை பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி முன்னிலையில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சியமைந்தால் ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். திமுக, காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. வாரிசு அடிப்படையிலான குடும்ப ஆதிக்கமே மேலோங்கியுள்ளன. ஆகவே, ஜனநாயகத்துக்கு எதிரான வாரிசு

‘அம்மா உணவகம் தந்த அன்னலட்சுமிக்கு ஓட்டு போடுங்கள்’ : தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத்யா

‘அம்மா உணவகம் தந்த அன்னலட்சுமிக்கு ஓட்டு போடுங்கள்’ : தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சத்யா

ஞாயிறு, மே 08,2016, வீடு வீடாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் தி.நகர் சத்யா வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது ‘அம்மா உணவகம் தந்த அன்னலட்சுமிக்கு ஓட்டு போடுங்கள்’ என பிரசாரம் செய்கிறார். தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்யா. இவர் தென் சென்னை (வடக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினராகவும், கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். சத்யா போட்டியிடும் தியாகராயநகர் தொகுதியில் அவர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைப்பு: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைப்பு: கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதில்

ஞாயிறு, மே 08,2016, தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் உள்ள 310 ஏரிகள், 63 அணைகள் மற்றும் அதன் நீர்வழங்கு வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி கருணாநிதியும், திமுகவினரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 14 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் குறித்து நான்