அதிமுக தேர்தல் அறிக்கையே மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது : எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

அதிமுக தேர்தல் அறிக்கையே மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதை உறுதிபடுத்தியுள்ளது : எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சனி, மே 07,2016, சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்போவது உறுதி. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி. 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தது. அத்திக்கடவு–அவினாசி திட்டம் செயல்படுத்த இருப்பது.

‘உங்களுக்காக உழைக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ ஆர்.கே.நகர் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

‘உங்களுக்காக உழைக்க மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ ஆர்.கே.நகர் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

சனி, மே 07,2016, நீங்கள் தான் என் மூச்சுக் காற்று, உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று தனது தொகுதியான ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக சென்று வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது சென்ற இடமெல்லாம் சாலையின் இருபுறத்திலும் மக்கள் வெள்ளமென திரண்டு அவரை வரவேற்றனர். பலர் மலர்தூவி முதல்வரை வரவேற்றனர். அவர்களை பார்த்து முதல்வர் கையசைத்தபடி சென்றார்.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக

புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து : முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

வெள்ளி, மே 06,2016, புதுச்சேரி மாநிலத்துக்கு என தனியாக தொலைநோக்குத் திட்டம்-2030 தயாரிக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான, அ.இ.அ.தி.மு.க.

அம்மா உணவகத்தை முடக்க திமுக தேர்தல் அறிக்கையில் சதி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

அம்மா உணவகத்தை முடக்க திமுக தேர்தல் அறிக்கையில் சதி : முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, மே 06, 2016. அம்மா உணவகத்தை முடக்க திமுக தேர்தல் அறிக்கையில் சதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கு அறிஞர் அண்ணா உணவகம் மூலம் உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்து ஏமாற்றப் பார்க்கின்றனர். இந்தத் திட்டம் இந்து சமய அறநிலையத் துறை,

5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, மே 06,2016, திருப்பூர், கோவை, அரியலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுவதாக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்