முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம்

வெள்ளி, மே 06,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், இன்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் 5 இடங்களில் பொதுமக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று நேரில் சென்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். டாக்டர்

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பது உறுதி : மதுரை ஆதீனம்

முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பது உறுதி : மதுரை ஆதீனம்

வெள்ளி, மே 06,2016, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்சாலையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்கிறேன். காரணம் அ.தி.மு.க. செயலாளர் ஜெயலலிதா. அவர் இந்த நாட்டின் ஈடு இணையற்ற தலைவி. அ.தி.மு.க. வில் தவறு

வேலை இல்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

வேலை இல்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

வெள்ளி, மே 06,2016, லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும், கல்விக்கடன் பெற்று வேலை இல்லாமல் இருப்பவர்களின் கல்விக்கடனை அரசே செலுத்தும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   சிறுதொழில் வளர்ச்சி * மண்பாண்ட தொழிலாளர்களுக்கான மழைக்கால உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். மண்பாண்டங்கள் தயாரிக்க மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  * சிட்கோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் தொழிற்பேட்டைகளை நிறுவினால்

அன்புமணி பிரசாரக்கூட்டத்தில் குடிபோதையில் நடனமாடி மயங்கி விழுந்த பாமக தொண்டர்

அன்புமணி பிரசாரக்கூட்டத்தில்  குடிபோதையில்  நடனமாடி மயங்கி விழுந்த பாமக தொண்டர்

வெள்ளி, மே 06,2016, மதுவின் தீமைகள் குறித்து பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கிப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அக்கட்சித் தொண்டர் ஒருவர் குடி போதையில் மயங்கி விழுந்தார். தேன்கனிக்கோட்டையில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் வேட்பாளர் அருண்ராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அன்புமணி, பாமக ஆட்சிக்கு வந்ததும் முதல் நாள், முதல் கையெழுத்தே பூரண மது விலக்காகத்தான் இருக்கும் என உறுதியளித்தார். மதுவின் தீமைகள் குறித்தும் அவர் கட்சித் தொண்டர்களுக்கு

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு

வெள்ளி, மே 06,2016, விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோலிய பொருட்களின் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்த்தலாம் என்ற கொள்கை முடிவை முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணி மேற்கொண்டது. விலை உயர்விலிருந்து மக்களை பாதிப்படையாமல் பாதுகாத்தது அதிமுக அரசு என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றம் மற்றும் புதுவை

விலையில்லா கைப்பேசி; விவசாய, கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட ஏராளமான புதிய திட்டங்களுடன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

விலையில்லா கைப்பேசி; விவசாய, கல்விக் கடன்கள் ரத்து உள்ளிட்ட ஏராளமான புதிய திட்டங்களுடன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்

வெள்ளி, மே 06,2016, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும், 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கான அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச்  செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்