பெருந்துறையில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தேர்தல் பிரச்சாரம்

பெருந்துறையில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தேர்தல் பிரச்சாரம்

புதன்கிழமை, மே 04, 2016, தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்திற்கு பேராதரவு திரட்டுகிறார். முதலமைச்சரை வரவேற்கவும், அவரது எழுச்சியுரையைக் கேட்கவும், பொதுமக்களும், கழகத் தொண்டர்களும், மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்”

முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் வரலாறு காணாத எழுச்சி – 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து

முதலமைச்சரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் வரலாறு காணாத எழுச்சி – 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து

புதன்கிழமை, மே 04, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களால் பெருமளவில் பயன்பெற்ற தமிழகத்தின் அனைத்து தரப்பினரும், வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு பேராதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில், பொதுமக்களிடையே வரலாறு காணாத எழுச்சி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் செல்வாக்கால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம் அமோக வெற்றிபெறும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்

கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தந்திருக்கிறார் : நாகர்கோவிலில் சரத்குமார் பேச்சு

கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தந்திருக்கிறார் : நாகர்கோவிலில் சரத்குமார் பேச்சு

புதன், மே 04,2016, கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தந்திருக்கிறார் என்று நாகர்கோவிலில் நேற்று தேர்தல் பிரசாரத்தின்போது சரத்குமார் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ச.ம.க. தலைவர் சரத்குமார் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு குமரி மாவட்டம் வந்தார். முதலில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து

தமிழக வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் சவால்

தமிழக வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – ஸ்டாலினுக்கு நாஞ்சில் சம்பத் சவால்

புதன், மே 04,2016, தமிழக வளர்ச்சி குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை என்.முத்துவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது: தற்போதைய தேர்தலில் மாற்றுக் கட்சி என்ற பெயரில் சிலர் களம் இறங்கியுள்ளனர். மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு போடும் வாக்கு, கடலில் விழுந்த மழைக்கு, பாறையில் விழுந்த விதைக்கு

அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமக பிரமுகர் கைது

அதிமுக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்: பாமக பிரமுகர் கைது

புதன், மே 04,2016, அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அதிமுக ஒன்றியச் செயலர் மனைவியிடம் வாக்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.  செந்துறை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், செந்துறை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி சுதா. கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சி பணிக்காக சுரேஷ் வெளியூர் சென்றுவிட்டார்.  இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர்

முதல்வர் ஜெயலலிதா 6-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா 6-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம்

புதன், மே 04,2016, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.  தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர். முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் நடந்த