தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவு – தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவு – தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

திங்கள் , மே 02,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று தமிழ்நாடு ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் மதுரையில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி, மதுரையில் இன்று ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.போசு தலைமையில் நடைபெற்ற இந்த

மீஞ்சூர் அருகே தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

மீஞ்சூர் அருகே தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திங்கள் , மே 02,2016, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் பட்டமந்திரி பகுதியில் தி.மு.க.பிரமுகர்களின் வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மீஞ்சூர் காவல்துறையினர் தி.மு.க. பிரமுகர்கள் ஜீவா மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகியோர் வீடுகளில்

அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : காங்கிரசின் ஐஎன்டியூசி அதிரடி அறிவிப்பு

அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : காங்கிரசின் ஐஎன்டியூசி அதிரடி அறிவிப்பு

திங்கள் , மே 02,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை, I.N.T.U.C. தொழிற்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளும், நேரில் சந்தித்து, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஆதரவை தெரிவித்தனர். அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16–5–2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை நேற்று ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் காளன் தலைமையில், மூத்த துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், பொதுச் செயலாளர் ஆர்.ஆதிகேசவன்,

தே.மு.தி.க. வேட்பாளரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் : பறக்கும் படை நடவடிக்கை

தே.மு.தி.க. வேட்பாளரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் : பறக்கும் படை நடவடிக்கை

திங்கள் , மே 02,2016, திண்டிவனம் தொகுதி தேமுதிக வேட்பாளரின் காரில், பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தி, ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில், தேமுதிக வேட்பாளராக உதயக்குமார் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியிலிருந்து மரக்காணத்துக்கு காரில் வந்தார். அப்போது, அனுமந்தை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை சுங்கச்சாவடியில் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர் உதயக்குமார் காரை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: கோவை பொதுக்கூட்டத்தில்முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்: கோவை பொதுக்கூட்டத்தில்முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

திங்கள் , மே 02,2016, கோவை மற்றும் நீலகிரியில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பட்டியலிட்டு பேசினார். இது குறித்து கோவை கொடிசியா மைதானத்தில் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அளித்த பட்டியல் வருமாறு: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட சில முக்கியப் பணிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க  விரும்புகிறேன். நீலகிரி மாவட்டத்தில் சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் செயல்படுத்திட சில்லஹல்லா அணை

ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது : முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு

ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது : முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு

திங்கள் , மே 02,2016, ஊழல் என்றாலே கருணாநிதி; கருணாநிதி என்றாலே ஊழல்’ , ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது என்று கோவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி பேசினார். தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நேற்று கோவை `கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு கோவை

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; கோவையில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; கோவையில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்

ஞாயிறு, மே 01,2016, கோவை கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்ட கூட்டத்தில் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தற்போது உரையாற்றி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாபேசியவை பின்வருமாறு:- தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்தது எனது தலைமையிலான அரசுதான். இனிவரும் காலத்தில் மேலும் பல திட்டங்கள் தொழிலாளர்களுக்காக நிறைவேற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்களின் நிலை உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைத்து துறை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.568 கோடி