திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

திருநின்றவூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை  மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

புதன், ஏப்ரல் 27,2016, ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா திருநின்றவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  தேர்தல் அலுவலகத்தை ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜன் திறந்து வைத்துப் பேசியதாவது:  தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா அலை வீசுகிறது. மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உயரிய லட்சியத்தோடு, தவ வாழ்க்கையை ஏற்று தமிழ் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் மகத்தான தலைமையின் கீழ் பொற்கால ஆட்சி தொடர அதிமுக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் குற்றச்சாட்டு

புதன், ஏப்ரல் 27,2016, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க.வின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்து அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திரு. செல்வராஜ், அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் கழக வேட்பாளர் திரு. மனோகரனை ஆதரித்து, வாக்கு சேகரித்த திரு. செல்வராஜ், முன்னாள் அமைச்சர் கே.என்.

மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 6 மாவட்ட வேட்பாளர்களை அறிமுகபடுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம்

மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் 6 மாவட்ட வேட்பாளர்களை அறிமுகபடுத்தி முதல்வர் ஜெயலலிதா இன்று  பிரச்சாரம்

புதன், ஏப்ரல் 27,2016, முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை மதுரை வருகிறார். பாண்டிகோவில் ரிங்ரோடு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவரது பேச்சை கேட்க லட்சக்கணக்கான மக்கள் திரளுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும்

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சி : தம்பிதுரை

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி  கருணாநிதி ஆட்சி : தம்பிதுரை

புதன், ஏப்ரல் 27,2016, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை துணைத் தலைவரும் , அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவை அனைவரும் பாராட்டுவதாக குறிப்பிட்டார். கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் ஊழல் அதிகம் நடைபெற்றது என்றும், இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், அது கருணாநிதி ஆட்சி தான்

தேர்தல் விதிகளை மீறியதாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது வழக்குபதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது வழக்குபதிவு

புதன், ஏப்ரல் 27,2016, தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிகப்படியான வாகனங்களில் வந்த மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவானி மீது பாலமேடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.  மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்ரீப்ரியா தேன்மொழி போட்டியிட முன்வராத நிலையில், ஆதனூர் ஊராட்சி தலைவர் சின்னகருப்பன் மனைவி பவானியை வேட்பாளராக திமுக தலைமைக்கழகம் அறிவித்தது.  மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பவானி வலையபட்டி அருகே உள்ள

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் உருவபொம்மையை எரித்து போராட்டம்

புதன், ஏப்ரல் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்படைந்துள்ள அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஏற்கெனவே கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்