பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சிப் பேருரையாற்றி, அம்மாநிலத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதற்காக, சென்னை போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்ட அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்கள் மே மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு,

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க புதிய வேட்பாளர் எஸ். ரத்னா : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க புதிய வேட்பாளர் எஸ். ரத்னா : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டப்பேரவை தேர்தலில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ராமநாதனுக்கு  பதிலாக, திருமதி. எஸ். ரத்னா நிறுத்தப்படுவதாக கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தஞ்சாவூர் வடக்கு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில்,முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்

சென்னை  ஆர்.கே.நகர் தொகுதியில்,முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று, வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக, தண்டையார்பேட்டைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும், ஏராளமான கழக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 227 தொகுதிகளிலும், தோழமை கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா ; சரத்குமார் பேச்சு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசனை ஆதரித்து, திண்டுக்கல் நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சீனிவாசன், மேயர் மருதராஜ் ஆகியோர் வேனில் வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில்

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளரை மாற்ற கோரி தில்லியில் உண்ணாவிரதம் : மேல்புறத்தில் விஜயதரணி உருவபொம்மை எரிப்பு

திங்கள் , ஏப்ரல் 25,2016, சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விளவங்கோடுமேல்புறத்தில் ஒரு பிரிவினர் விஜயதரணி எம்.எல்.ஏ. உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில்

110 வது விதியின் கீழ் தாக்கலான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம் : திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

110 வது விதியின் கீழ் தாக்கலான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம் : திமுக புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

திங்கள் , ஏப்ரல் 25,2016, தமிழக சட்டமன்றத்தில் 110 வது விதியின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் மளமளவென்று நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் பொய்யையே ஆயுதமாக கருதும் கருணாநிதி, திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று பொய்யான பிரசாரம் செய்து வருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே திமுகவின் பொய்ப்பிரசாரத்திற்கு மக்கள் சம்மட்டி அடியை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி விரிவான விளக்கத்தையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்.  இது

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

தனித் தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு

திங்கள் , ஏப்ரல் 25,2016, தனித் தமிழீழம் அமைவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண