ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல்

திங்கள் , ஏப்ரல் 25,2016,  முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 16ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி துவங்கியது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் இல்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று மனு தாக்கல் செய்யும் பணி மீண்டும் துவங்குகிறது. வருகிற 29ம் தேதிவரை,

மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் : ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் :  ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலையை ஆதரித்து வாகன பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது.  அதன்படி இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாகன பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த திமுகவினர், அதிமுக பிரச்சார வாகனத்தை வழிமறித்து திடீர்

கட்சியினரிடையே வலுக்கும் எதிர்ப்பால் வாக்கு சேகரிக்க முடியாமல் திணறும் திமுக வேட்பாளர் மைதீன்கான்

கட்சியினரிடையே வலுக்கும் எதிர்ப்பால் வாக்கு சேகரிக்க முடியாமல் திணறும் திமுக வேட்பாளர் மைதீன்கான்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டி.பி.எம். மைதீன்கானுக்கு கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரால் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட முடியவில்லை. திமுக சார்பில் பாளையங்கோட்டை தொகுதிக்கான வேட்பாளராக மைதீன்கான் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, செல்பேசி டவரில் ஏறி தற்கொலை மிரட்டல், மொட்டை அடித்தல் என்று பல்வேறு போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக

அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் : மதுரை ஆதினம் அறிவிப்பு

ஞாயிறு, ஏப்ரல் 24,2016, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்வதாக மதுரை ஆதினம் அருணகிரி நாதர் ஞானசம்பந்த தேசிகர் கூறினார்.  சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசவில்லை. அதேநேரம் சன்னிதானத்தின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.  பெண்ணாக இருந்து பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளித்து வெற்றி பெற்றுள்ளார். அதனாலேயே எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். ஏழைகள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால்,