தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்து சாதனை : தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்து சாதனை : தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல்

வியாழன் , ஏப்ரல் 21,2016, தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 191 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் மோசமான நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் மிகக்கடுமையான மின்வெட்டை சந்தித்து வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிப்படி, மின்உற்பத்தியை பெருக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதன் மூலம் தமிழகம் தற்போது மின்மிகை உற்பத்தி மாநிலம் என்ற பெருமையுடன்

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு : ஒட்டன் சத்திரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கிட்டுசாமி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு : ஒட்டன் சத்திரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கிட்டுசாமி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஏப்ரல் 21,2016, தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க தோழமைக் கட்சிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கப்படுவதாக கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேலூர் தொகுதி கழக வேட்பாளர் வாபஸ் பெறப்படுவதுடன், ஒட்டன் சத்திரம் தொகுதி கழக வேட்பாளரையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி,

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயணத் திட்டத்தில் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பயணத் திட்டத்தில் மாற்றம்

வியாழன் , ஏப்ரல் 21,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மேற்கோள்ள திட்டமிடப்பட்டிருந்த பிரசாரப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழக, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 23.4.2016 முதல் 12.5.2016 வரையிலான சுற்றுப் பயணத் திட்டம் பின்வருமாறு திருத்தி அமைக்கப்படுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் வேலை செய்வோம் : ஆம்பூரில் மாவட்டச் செயலாளரை திமுகவினர் முற்றுகை

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் வேலை செய்வோம் : ஆம்பூரில் மாவட்டச் செயலாளரை திமுகவினர் முற்றுகை

வியாழன் , ஏப்ரல் 21,2016, ஆம்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என திமுகவினர் திடீர் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது. அதிருப்தி வேட்பாளர்கள், வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது என தினமும் ஒவ்வொரு பிரச்சினைகளை முன்வைக்கும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி திமுகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி திமுகவினர் திருவோடு ஏந்தி போராட்டம்

வியாழன் , ஏப்ரல் 21,2016, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றக் கோரி, அக்கட்சியினர் குளமங்கலத்தில் திருவோடு ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் ஜி.சதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக திமுக ஒன்றியச் செயலாளரும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான சிவ.வீ. மெய்யநாதனை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் மே 14-ம் தேதி ஆலங்குடியில் திமுக கரை வேட்டிகளை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து