பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்ற கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்ற  கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

வியாழன் , ஏப்ரல் 21,2016, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தேர்தலுக்காக என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிய குற்றச்சாட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா சூடான பதிலடி கொடுத்துள்ளார். சேலம் கூத்தாடிபாளையத்தில் நேற்று நடந்த பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி அவர் பேசியதாவது, பெண்களைப் பாதுகாப்பதில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துவதால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ் நாட்டில் குறைவாகவே

சேலம் ஒரே மேடையில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா எழுச்சி பேருரை

சேலம் ஒரே மேடையில் 46 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா எழுச்சி பேருரை

வியாழன் , ஏப்ரல் 21,2016,  சேலம் , நாமக்கல், கோயம்புத்தூர், மாவட்டங்களை சேர்ந்த 46 அ.தி.மு.க. வேட்பாளர்களை சேலம் மகுடஞ்சாவடி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார்.  அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தோழமைக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் அடுத்த மகுடஞ்சாவடியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பேசினார். அப்போது சேலம், நாமக்கல் மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த 46 அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.  ஏற்காடு

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது : சேலம் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது : சேலம் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வியாழன் , ஏப்ரல் 21,2016, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.  சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் 53 வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசியது:  கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சி ஓர் அராஜக ஆட்சி. மக்களின் நலனுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அது மக்களை இருளில் தள்ளிய ஆட்சி.

சேலத்துக்கு பொதுக்கூட்டத்தில் பேருரையாற்ற வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

சேலத்துக்கு பொதுக்கூட்டத்தில் பேருரையாற்ற வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

புதன், ஏப்ரல் 20,2016, சேலம் மகுடஞ்சாவடியை அடுத்த கூத்தாடிபாளையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சாலையின் இருமருங்கிலும் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கே தங்கள் வாக்கு என விண்ணதிர முழக்கமிட்டனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்துடனும், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி என்ற முழக்கத்துடனும், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை, சென்னையில், கடந்த

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 218 இடங்களை வென்று வரலாறு காணாத வெற்றிபெறும் : பிரபல “தி பயோனியர்” இணையதள நிறுவனம் கருத்து வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 218 இடங்களை வென்று வரலாறு காணாத வெற்றிபெறும் : பிரபல “தி பயோனியர்” இணையதள நிறுவனம் கருத்து வெளியீடு

புதன்கிழமை, ஏப்ரல் 20, 2016, நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. கூட்டணி, 218 இடங்களை வென்று வரலாறு காணாத வகையில் மகத்தான வெற்றிபெறும் என பிரபல இணையதள செய்தி நிறுவனம் “தி பயோனியர்” கருத்து வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளும், பிரச்சாரங்களும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், “The Pioneer” என்ற பிரபல செய்தி நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில்,

சேலத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளரை நோக்கி கையை ஓங்கியதால் பரபரப்பு

சேலத்தில் விஜயகாந்த் பத்திரிகையாளரை நோக்கி கையை ஓங்கியதால்  பரபரப்பு

புதன்கிழமை, ஏப்ரல் 20, 2016, சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

ஊழல் பணத்தில் திமுகவினர் கட்சி நடத்தி வருகின்றனர்: பரிதி இளம்வழுதி குற்றச்சாட்டு

ஊழல் பணத்தில் திமுகவினர் கட்சி நடத்தி வருகின்றனர்: பரிதி இளம்வழுதி குற்றச்சாட்டு

புதன்கிழமை, ஏப்ரல் 20, 2016, ஊழல் பணத்தில் தான், திமுகவினர் கட்சி நடத்தி வருவதாக, அதிமுக சார்பில் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். எழும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பரிதி இளம்வழுதி, அத்தொகுதிக்குட்பட்ட புளிந்தோப்பு பகுதியில் இன்று வாக்கு சேரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தின்போது, அதிமுக அரசு மேற்கொண்ட பணிகள் காரணமாக, தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக தலைமை அராஜகமான முறையில் செயல்படுவதாகவும்,

வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

புதன், ஏப்ரல் 20,2016, இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நன்றி அறிவிப்பு கடிதம் வருகிற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் உலக நாடுகள்