ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து, திமுகவினர் சாலைமறியல்

ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து, திமுகவினர் சாலைமறியல்

சனி, ஏப்ரல் 16,2016, ஆம்பூர் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து, திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், குன்னூர், விருத்தாசலம் தொகுதிகளிலும் வேட்பாளர்களை மாற்ற கோரி திமுகவினர் போராட்டம் நடத்தினர். ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியை, கடந்த 1967 க்கு பிறகு, தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே திமுக தலைமை அறிவித்து வருகிறது. எனவே இந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சியினருக்கு தொகுதியை ஒதுக்குமாறு, கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் வரும் தேர்தலிலும் கூட்டணி கட்சியான

சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 246-வது பிறந்தநாள் : அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 246-வது பிறந்தநாள் : அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சனி, ஏப்ரல் 16,2016, சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 246-வது பிறந்தநாளை முன்னிட்டு, கவர்னகிரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவரும், வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை உடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு அழித்து உயிர்த்தியாகம் செய்தவருமான வீரன் சுந்தரலிங்கனார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது 246-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சொந்த ஊரான கவர்னகிரியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில், சுந்தரலிங்கனாரின் சிலைக்கு அரசு

திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கருணாநிதி வீடு முற்றுகை

திமுக வேட்பாளர்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கருணாநிதி வீடு முற்றுகை

சனி, ஏப்ரல் 16,2016, பாளையங்கோட்டை, விருத்தாசலம் தொகுதி வேட்பாளர்களை மாற்றக் கோரி, திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தை அந்தக் கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.  சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட சில வேட்பாளர்களை மாற்றக் கோரி, புதன்கிழமையே பிரச்னை வெடித்தது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு உள்ளிட்ட சில இடங்களில் வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.  இதையடுத்து, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த கிள்ளை

திமுக வேட்பாளர் சதீஷ்க்கு எதிர்ப்பு : ஆலங்குடியில் கட்சி வேட்டியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

திமுக வேட்பாளர் சதீஷ்க்கு எதிர்ப்பு : ஆலங்குடியில் கட்சி வேட்டியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

சனி, ஏப்ரல் 16,2016, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான வீ.மெய்யநாதன் அறிவிக்கப்படுவார் என ஆலங்குடி தொகுதி திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வேட்பாளர் பட்டியலில், ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் (34) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த அந்தக் கட்சியினர் புதன்கிழமை இரவு மறமடக்கியில் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில்லிருந்து நூற்றுக்கணக்கான திமுகவினர், வேட்பாளரை

திமுக வேட்பாளர்களுக்கு தொடரும் எதிர்ப்பு : சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளரை மாற்றக் கோரி உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

திமுக வேட்பாளர்களுக்கு தொடரும் எதிர்ப்பு : சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளரை  மாற்றக் கோரி உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி

சனி, ஏப்ரல் 16,2016, சீர்காழி: சீர்காழி தொகுதியில் திமுக நேரடியாக களம் காண வேண்டும் என்று அந்தக் கட்சியினர், தலைமையை வலியுறுத்தி வந்தனர். தேர்தலில் போட்டியிட சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.  பன்னீர்செல்வத்துக்கே வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியலில் சீர்காழி (தனி) தொகுதிக்கான வேட்பாளராக கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கிள்ளை எஸ். ரவீந்திரன் அறிவிக்கப்பட்டார். இது திமுகவினரிடையே கடும்

உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று கச்சத்தீவை மீட்போம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று கச்சத்தீவை மீட்போம் : முதல்வர் ஜெயலலிதா உறுதி

சனி, ஏப்ரல் 16,2016, உச்ச நீதிமன்ற உத்தரவு பெற்று கச்சத்தீவை மீட்டு பாரம்பரிய மீன் பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 14 அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பிரசார பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:  மக்களால் நான், மக்களுக்காகவே நான், உங்களால் நான், உங்களுக்காகவே

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி : அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி : அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

சனி, ஏப்ரல் 16,2016, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கருணாநிதி உடந்தையாக இருந்தார் என்றும் கச்சத் தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி என்றும் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக்கட்சிகளை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா , கடந்த 9 ம்தேதி சென்னையில் தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 21 அதிமுக வேட்பாளர்களை ஒரே