சசிகலா குடும்பத்தினரை நீக்கும் வரை அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

சசிகலா குடும்பத்தினரை நீக்கும் வரை அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை : மாஃபா பாண்டியராஜன்

ஜூன் 09, 2017,வெள்ளி கிழமை, சென்னை : அ.தி.மு.க.வில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்… கேள்வி:– அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனே தொடருவார் என்று அமைச்சர்கள் கூறிவருகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?. பதில்:– நாங்கள் அதை ஏற்கவில்லை. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்பது எங்களின் நிலைப்பாடு. அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட

பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப்புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன் : மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப்புத்தகங்கள்,சீருடைகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன் : மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

ஜூன் 08, 2017,வியாழக்கிழமை,  சென்னை : பள்ளிக்கூடங்கள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள் – சீருடைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் – நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் –

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் ஆபத்து வராது : ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் ஆபத்து வராது : ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் 07, 2017,புதன் கிழமை, தமிகழத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் அணியால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தினகரன் தலைமையில் ஒரு அணி உருவாகிறது, நீங்கள் தனி அணியாக இருக்கிறீர்கள், இதனால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா ? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம் “ தற்போது தமிழகத்தில் எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க படும் : மாஃபா பாண்டியராஜன்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க படும் : மாஃபா பாண்டியராஜன்

ஜூன் 06, 2017,செவ்வாய் கிழமை, திருத்தணி : பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைவந்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 95 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுக எம்எல்ஏக் கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர்

தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவு ஏற்படும் : எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆவேசம்

தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவு ஏற்படும் : எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஆவேசம்

ஜூன் 06, 2017,செவ்வாய் கிழமை, சென்னை : தினகரனை ஒதுக்கி வைக்கவோ, அவரைப் பற்றி பேசவோ அமைச்சர்களுக்கு தகுதியில்லை, தினகரனை ஒதுக்கி வைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். தினகரன் ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியதாவது:- கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 41 நாட்கள் ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்ததும் சசிகலா பார்த்து பேசிய பிறகு செயல் படப்போவதாக கூறினார்.அவர் பெங்களூர் சிறைக்கு சென்று சந்தித்த விட்டு வருவதற்குள்