அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் விஜிலா சத்தியானந்த் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் விஜிலா சத்தியானந்த் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஏப்ரல் 14,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, கழக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் திருமதி. விஜிலா சத்தியானந்த் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா  வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழக மாநிலங்களவைக் குழு கொறடாவும், திருநெல்வேலி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளருமான திருமதி விஜிலா சத்தியானந்த், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் 13-4-2016 முதல்

சுயநலத்துக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைத்தவர் கருணாநிதி – முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

சுயநலத்துக்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தை ஒத்திவைத்தவர் கருணாநிதி – முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வியாழன் , ஏப்ரல் 14,2016, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என்னால் துவக்கப்பட்டது, சுயநலத்துக்காக இத்திட்டத்தை ஒத்திவைத்தவர் கருணாநிதி என்று தருமபுரி பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார். தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே. 16ம் தேதி அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு ஒசூர் சென்று, அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி

‘விவசாய நிலம் வழியாக குழாய் பதிக்கவிடாமல் கெயில் நிறுவனத்தை தடுப்பேன்’ தர்மபுரி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

‘விவசாய நிலம் வழியாக குழாய் பதிக்கவிடாமல் கெயில் நிறுவனத்தை தடுப்பேன்’ தர்மபுரி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

வியாழன் , ஏப்ரல் 14,2016, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கெயில் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக  குழாய் பதிப்பு பணிகளை மேற்கொள்ளாதவாறு நான் நடவடிக்கை எடுப்பேன் என்று தர்மபுரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 9 ம்தேதி முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா கடந்த 9 ம்தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா , அதிமுகவின் 21 வேட்பாளர்களை

மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா, விஷு தின வாழ்த்து

மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா, விஷு தின வாழ்த்து

வியாழன் , ஏப்ரல் 14,2016, மலையாள மொழி பேசும் மக்களுக்கு, முதலமைச்சர்  ஜெயலலிதா, விஷு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். மலையாள மக்களின் வாழ்வில் வசந்தத்தையும், அன்பையும், அமைதியையும் வழங்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு மலரட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள விஷு தின வாழ்த்து செய்தியில், மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு திருநாளாம் “விஷு” திருநாளில், மலையாள மக்கள் அனைவருக்கும் தமது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்

இன்று தமிழ் புத்தாண்டு : வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று தமிழ் புத்தாண்டு : வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வியாழன் , ஏப்ரல் 14,2016, தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும், வாழ்வு செழிக்கட்டும், நலங்கள் தழைக்கட்டும், வளங்கள் பெருகட்டும், வெற்றிகள் தொடரட்டும் என தமிழ் புத்தாண்டையொட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள “தமிழ்ப் புத்தாண்டு” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- சித்திரை முதல் நாளான ‘‘தமிழ்ப் புத்தாண்டு மலருகின்ற இந்தப் பொன்னாளில் என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். “ஆதிமனிதன்

தருமபுரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

தருமபுரிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு

புதன், ஏப்ரல் 13,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில், இன்று, தர்மபுரியில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுச்சிப் பேருரையாற்றினார். தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையிலிருந்து வான்வழியாக புறப்பட்டு, தருமபுரி வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற

அதிமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு : அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர் அறிவிப்பு

அதிமுகவுக்கு கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு : அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர் அறிவிப்பு

செவ்வாய், ஏப்ரல் 12,2016, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கிறிஸ்தவ மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பிரின்ஸ் ஜெ.சுந்தர், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித யாத்திரைக்கு அதிமுக அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் வழங்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலித் மக்கள் சுய விருப்பத்தின்படி கிறிஸ்தவத்தைப் பின்பற்றினால் அவர்களது சலுகைகளை நிராகரிக்கக் கூடாது என்பதை ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மூலம் நாடாளுமன்றம் வரை

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாளை மலரஞ்சலி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாளை மலரஞ்சலி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஏப்ரல் 12,2016, அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வினர், மலர் தூவி மரியாதை செலுத்துவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரும். அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு; சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளான 14-ம் தேதி காலை 10.30 மணி அளவில், சென்னை, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு,