உங்கள் வளர்ச்சிக்காக,மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும் : தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரை

உங்கள் வளர்ச்சிக்காக,மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும் : தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுச்சி உரை

செவ்வாய், ஏப்ரல் 12,2016, உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக, என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்தத் தாய்க்கு தெரியும். அதை நிச்சயம் செய்வேன். கடந்த ஐந்தாண்டுகளில் செய்த திட்டங்களை விட, இன்னும் அதிகமான நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்துவேன் என்று விருதாசலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான அ.தி.மு.க. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த

விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் எதிரான மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்திற்கு கருணாநிதி ஆதரவா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் எதிரான மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்திற்கு கருணாநிதி ஆதரவா? முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வி

செவ்வாய், ஏப்ரல் 12,2016, தமிழகத்தில் விவசாயிகளும், குடிசைவாசிகளும் மின்திருட்டில் ஈடுபடுவதாக நினைக்கிறாரா? என்று கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சூடான கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தை ஏற்கிறாரா? என்றும் விருத்தாசலத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கணை தொடுத்துள்ளார். அடுத்த மாதம் 16-ம் தேதி தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று, அதிமுக

விருத்தாசலத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு

விருத்தாசலத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறப்பான வரவேற்பு

திங்கட்கிழமை, ஏப்ரல் 11, 2016, விருத்தாசலத்தில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில், கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை மற்றும் கழக நிர்வாகிகள் மலர்க்கொத்துகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். விருத்தாசலம் – ஆலிச்சிக்குடி பைபாஸ் சாலையில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று பிற்பகலில் விருத்தாசலம் சென்றடைந்தார். ஹெலிகாப்டர்

அதிமுக வேட்பாளர் பாண்டியராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆவடியில் தொடங்கினார்

அதிமுக வேட்பாளர் பாண்டியராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆவடியில் தொடங்கினார்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016, ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக் கப் பட்டுள்ள கா.பாண்டியராஜன் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிக வில் இருந்து விலகிய கா.பாண்டிய ராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருமுல்லைவாயலில் உள்ள பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிலில் இருந்து அவர் நேற்று காலை 11 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன் கட்சி

முதல்வர் ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம்

ஞாயிறு, ஏப்ரல் 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு, 13 அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். சட்டமன்ற தேர்தல் மே 16–ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தீவுத்திடலில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் 20 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். இந்த நிலையில், 2–வது நாளாக இன்று (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்

கேரளா கோயில் தீ விபத்து,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : கேரள அரசுக்கு உதவ மருத்துவ குழுவை அனுப்பினார்

கேரளா கோயில் தீ விபத்து,முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : கேரள அரசுக்கு உதவ மருத்துவ குழுவை அனுப்பினார்

திங்கள் , ஏப்ரல் 11,2016, கேரளா மாநிலத்தில் பரவூர் கோவிலில் நடந்த  தீ விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவில் கோவிலில் நடந்த பட்டாசு தீ விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 100 பேருக்கு மேல் உயிரிழப்பு எற்பட்ட இச்சம்பவம் மோசமான துயர சம்பவம், பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கேரள பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு காயம்