முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைக்கும் : அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் எதிர்க்கட்சிகளை திக்குமுக்காட வைக்கும் :  அமைச்சர் பா.வளர்மதி பேச்சு

சனி, ஏப்ரல் 09,2016, அண்ணாநகர் தொகுதி அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அரும்பாக்கம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது.தீவுத்திடலில் நடைபெறும் இந்த பிரச்சார கூட்டத்தில் அண்ணாநகர் தொகுதியில் இருந்து மட்டும் 20 ஆயிரம் பேர் செல்ல அண்ணாநகர் தொகுதியில் நடந்த அண்ணாநகர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமானபேர் மிகுந்த உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சரும் ஆயிரம்விளக்கு தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளருமான பா.வளர்மதி, அண்ணா நகர்

13 மீனவர்களையும், 85 படகுகளையும் விடுவிக்க விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

13 மீனவர்களையும், 85 படகுகளையும் விடுவிக்க விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனிக்கிழமை, ஏப்ரல் 09, 2016, இலங்கை கடற்படை பிடித்து சென்றுள்ள13 தமிழக மீனவர்களை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,  புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடல் பகுதியில் இருந்து 9 தமிழக மீனவர்கள் எந்திர படகில் மீன்பிடிக்கச்சென்றபோது அவர்களை இலங்கை கடற்படை 7-4-2016அன்று அதிகாலை நேரத்தில் கைது செய்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றது.

மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு : 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் எனவும் அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு : 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக கடுமையாக உழைப்போம் எனவும் அறிவிப்பு

சனி, ஏப்ரல் 09,2016, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும், ஒட்டன்சத்திரத்தில் ஹாரூன் ரசீதும் போட்டியிட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார். வேட்பாளர்கள் அறிமுகம் சென்னை புதுப்பேட்டையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்

சனி, ஏப்ரல் 09,2016, சென்னையில் இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஒரேமேடையில் 20 அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, இன்று முதல் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.  தொடர்ந்து மே மாதம் 12-ம் தேதி வரை, தமிழகத்தின் மாவட்டங்களின் தலைநகரங்களிலும், புதுச்சேரியிலும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களை

முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்

முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலம்

சனி,ஏப்ரல் 09,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும், பொய்யானது என்பது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது. அண்மையில் டெல்லியில் பேசிய மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உதய் மின்திட்டம் குறித்து தமிழக முதலமைச்சருடன் பேச பலமுறை முயற்சி எடுத்தும், அவருக்கு கடிதம் எழுதியும் சந்திக்க முடியவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தீபக்

பென்னாகரம், வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பென்னாகரம், வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஏப்ரல் 08,2016, மே மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் கே.பி. முனுசாமியும், வேப்பனஹள்ளி தொகுதியில் ஏ.வி.எம்.மது என்கிற ஹேம்நாத் ஆகியோர் போட்டியிடுவார்கள் என  முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது., அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு

தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் எல்.இ.டி வாகனப் பிரச்சாரம் : பொதுமக்கள் ஆர்வம்

தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் எல்.இ.டி வாகனப் பிரச்சாரம் : பொதுமக்கள் ஆர்வம்

வெள்ளி, ஏப்ரல் 08,2016, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி எல்.இ.டி வாகனப் பிரச்சாரம் நேற்று நடந்து. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாதம் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 14 நாட்களே உள்ளன. யார், யாருக்கு எந்த தொகுதி என்று முடிவு செய்ய முடியாமல் பல்வேறு கட்சிகளிடையே குழப்பம் சிக்கல் உள்ளது. ஆனால்

இன்று யுகாதி பண்டிகை : வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று யுகாதி பண்டிகை : வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வெள்ளி, ஏப்ரல் 08,2016, இந்த யுகாதி புத்தாண்டு வெற்றிகளை வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  “யுகாதி தின” வாழ்த்துச் செய்தி வருமாறு:- புத்தாண்டு நன்நாளாம் “யுகாதி” திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய “யுகாதி” திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற

எல்.கே. அத்வானியின் மனைவி மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

எல்.கே. அத்வானியின் மனைவி மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

வியாழக்கிழமை, ஏப்ரல் 07, 2016, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. எல்.கே. அத்வானியின் மனைவி திருமதி கமலா அத்வானி மறைவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா, திரு. எல்.கே. அத்வானிக்கு இன்று அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், அவரது அன்பான மனைவி திருமதி. கமலா அத்வானியின் மறைவுச் செய்தியை அறிந்ததும் தாம் மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். இந்த சோகச் சூழலில், எந்தவொரு வார்த்தையும் அமைதியைத் தராது என்றபோதிலும், அத்வானிக்கும், அவரது குடும்ப