முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை

வியாழன் , ஏப்ரல் 07,2016, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 99 பேர், முதலமைச்சர்  ஜெயலலிதா, மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக விடுவிக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 பேர், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 பேர், தஞ்சையைச் சேர்ந்த 3 பேர், தூத்துக்குடியைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 99 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய அதிமுக செயலாளர் ஓ.எஸ்.மணியன் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஏப்ரல் 07,2016, நாகப்பட்டினம் மாவட்ட புதிய அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி. ஒ.எஸ். மணியன் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து கே. ஏ.ஜெயபால் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளர் ஒ.எஸ்.மணியன் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர்

தமிழ்நாடு – புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் திருத்தப் பட்டியல் : முதல்வர் ஜெயலலிதா வெளியீடு

தமிழ்நாடு – புதுச்சேரியில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் திருத்தப் பட்டியல் : முதல்வர் ஜெயலலிதா வெளியீடு

வியாழன் , ஏப்ரல் 07,2016, தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 3 தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும், அ தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து அ தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மே 16-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதையொட்டி அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு : அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு : அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அறிவிப்பு

புதன், ஏப்ரல் 06,2016, தமிழக சட்டமன்றத் தேர்தலில் படையாச்சியார் பேரவை உள்ளிட்ட 30 வன்னியர் அமைப்புகள், அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய படையாச்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் திரு.திருவாரூர்காந்தி, தங்கள் அமைப்பு உட்பட மொத்தம் 30 வன்னியர்கள் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அனைத்து அமைப்புகளும் சேர்ந்து, புதிய உழைப்பாளர் கட்சி என்ற கட்சியைத்

வாணியம்பாடி தி.மு.க.வில் இரு கோஷ்டியினரிடையே கடும் மோதல் : கட்சி அலுவலகம் சூறை

வாணியம்பாடி தி.மு.க.வில் இரு கோஷ்டியினரிடையே கடும் மோதல் : கட்சி அலுவலகம் சூறை

புதன், ஏப்ரல் 06,2016, வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தி.மு.க. கோஷ்டியினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் அக்கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டது. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வாணியம்பாடி அருகே உள்ள ஆம்பூர்பேட்டையை சேர்ந்த ரகு என்பவர் தி.மு.க. நகர மாணவரணி தலைவராகவும், பிரேமா என்பவர் நகர மகளிர் அணி தலைவியாகவும் பதவி வகித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் பின்னணியில், தி.மு.க. நகர செயலாளர் தன்வீர் அகமது இருப்பதாகத்