அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்!

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்!

புதன், ஏப்ரல் 06,2016, அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துராஜா மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அத்தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அருப்புக்கோட்டை தொகுதியின் வேட்பாளராக முத்துராஜா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அருப்புக்கோட்டை தொகுதியின் வேட்பாளரான முத்துராஜா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அதிமுக சார்பாக போட்டியிருவார்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி

புதன், ஏப்ரல் 06,2016, உதய் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றி அமைக்கப்படுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? என்று அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பியூஷ் கோயல், டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ‘உதய்’ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னமும் கையொப்பம் இடவில்லை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், ஏப்ரல் 06,2016, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக, சரக்குக் கட்டணங்கள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு, ஏழை-எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிப்படையும் என முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை, எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- எண்ணெய் நிறுவனங்கள் இன்று (நேற்று) முதல், பெட்ரோல்

தி.மு.க. ஆட்சியில்,பழுதடைந்து கிடந்த தூத்துக்குடி அனல்மின் நிலையம் ,முதலமைச்சர் ஜெயலலிதா 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புனரமைத்ததால் முழு உற்பத்தியை எட்டி சாதனை!

தி.மு.க. ஆட்சியில்,பழுதடைந்து கிடந்த தூத்துக்குடி அனல்மின் நிலையம் ,முதலமைச்சர் ஜெயலலிதா 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புனரமைத்ததால் முழு உற்பத்தியை எட்டி சாதனை!

செவ்வாய், ஏப்ரல் 05,2016, தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் அனல் மின் நிலையத்தை புனரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா, சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், இந்த அனல் மின் நிலையத்தில் அனைத்து 5 அலகுகளும் முழுமையாக செயல்பட்டு, தினமும் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அனல் மின் நிலைய ஊழியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகம் மின் பற்றாக்குறையால் இருளில்

திருநங்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய குஷ்புவை கண்டித்து சத்தியமூர்த்திபவன் முற்றுகை

திருநங்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய குஷ்புவை கண்டித்து சத்தியமூர்த்திபவன் முற்றுகை

செவ்வாய், ஏப்ரல் 05,2016, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2–ந் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘திருநங்கைகள் அவசரமாக உயர் பதவிகளுக்கு செல்ல நினைக்கிறார்கள் என்று சில கருத்துகளை தெரிவித்திருந்தார். குஷ்புவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திருநங்கை சுதா தலைமையில் 20–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். குஷ்புவுக்கு எதிராக

கருணாநிதி மன்னிப்பு கேட்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

கருணாநிதி மன்னிப்பு கேட்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

செவ்வாய், ஏப்ரல் 05,2016, இறைத்தூதர் நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை ஒப்பிட்டு பேசியதற்காக,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாகராஜன், நபிகள் நாயகத்திற்கு அடுத்து கருணாநிதி தான் முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மத் யூசுப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நபிகள் நாயகத்துடன்

அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு, முதல்வர் ஜெயலலிதா 9-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் தொடங்குகிறார்

அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு, முதல்வர் ஜெயலலிதா 9-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் தொடங்குகிறார்

செவ்வாய், ஏப்ரல் 05,2016, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் 9-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்ட பிரசாரத்தை வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்கி மே- 12-ம் தேதி வேலூரில் நிறைவு செய்கிறார. இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- 16.5.2016 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத்