முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு : தேர்தலில் முக்‍குலத்தோர் புலிப்படை அமைப்பு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு : தேர்தலில் முக்‍குலத்தோர் புலிப்படை அமைப்பு அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

திங்கட்கிழமை, ஏப்ரல் 04, 2016, சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் சந்தித்து அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவை தெரிவித்தார். இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனத்தலைவர் கருணாஸ் தலைமையில், அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் பாண்டித்துரை, துணைத் தலைவர் ஆ.சந்தனகுமார், பொருளாளர் ஞ.முருகன், முக்குலத்தோர் முகவரி ஆசிரியர்

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்ய தொண்டர்கள் முழு மூச்சுடன், தேர்தல் பணியாற்றிட வேண்டும்

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்ய தொண்டர்கள் முழு மூச்சுடன், தேர்தல் பணியாற்றிட வேண்டும்

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைக்க, கழகத் தொண்டர்கள் அனைவரும் முழு மூச்சுடன், தேர்தல் பணியாற்றிட வேண்டும் என, மாநிலம் முழுவதும் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் வாக்கு சேகரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அ.இ.அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாடம்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.

குக்கிராமங்களை சென்றடைந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்ட உதவிகள் – மீண்டும் அரியணையில் அமரச் செய்ய திருவள்ளூர் மாவட்ட மக்கள் உறுதி

குக்கிராமங்களை சென்றடைந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்ட உதவிகள் – மீண்டும் அரியணையில் அமரச் செய்ய திருவள்ளூர் மாவட்ட மக்கள் உறுதி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில், அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய் திட்டத்தினால், திருவள்ளூர் மாவட்டம் ஈக்குவார்பாளையம் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள 79,394 குக்கிராமங்களிலும் குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற உன்னத இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 2011-2012-ம் ஆண்டு தாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும்தான் குக்கிராமங்களை

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரி மாவட்ட கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரி மாவட்ட கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில், 109 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் உள்ளிட்ட ஒன்பது பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறும் வகையில், 109 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டப்

வழக்கறிஞர்களின் சேமநல நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், புதிய நீதிமன்ற கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நாட்டின் நல்லாட்சிக்கு சான்றாக, கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், நீதிமன்றங்கள் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட்டது. நீதிமன்றங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சேமநல நிதியினை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஏப்ரல் 01,2016, வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.  மிகப்பெரிய  வெற்றியை பெற்றாக வேண்டும். அதுவே, நாம் எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன் என முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, வரும் சட்டப் பேரவைத் பொதுத்தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளை காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றாக வேண்டும். அதுவே, நம் எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை