தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திங்கள் , மார்ச் 21,2016, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவையடுத்து, திரையால் மறைக்கப்பட்ட மறைந்த தலைவர்கள் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் கைத்தட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த 4–ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

உவரி கடல்பகுதியில் அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி தீவிரம் : கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மீனவ மக்கள் நன்றி

உவரி கடல்பகுதியில் அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி தீவிரம் : கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மீனவ மக்கள் நன்றி

ஞாயிறு, மார்ச் 20,2016, நெல்லை மாவட்டத்தில், உவரி கடல்பகுதி மீனவ மக்களின் நீண்ட வருட கோரிக்கையான அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நெல்லை மாவட்டம் உவரி கடல் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை சீறி எழும்பி வருவதால், கடற்கரையோரத்தில்

வேலூரில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி : விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வேலூரில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி : விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

ஞாயிறு, மார்ச் 20,2016, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, வேலூர் மாவட்டத்தில், கோமாரி நோய் பரவாமல் தடுக்க, 10 சுற்றுகளில் 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு ஊசி போடும் முகாம்கள் நடைபெற்றன. வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 743 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் மற்றும் ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி முகாம்கள் 9 சுற்றுகள்

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க.வினர் விதிமீறல் : நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா

தோல்வி பயம் காரணமாக, தி.மு.க.வினர் விதிமீறல் : நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா

ஞாயிறு, மார்ச் 20,2016, தோல்விபயம் காரணமாக, தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பெண்களுக்கு பணம் கொடுத்த காட்சி, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுனில், நேற்று தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு, பணம் தருவதாகக் கூறி, ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில், பொதுக்கூட்டம் முடிந்த பின்னரும் பணம் தரப்படாததால், மேடை அருகே சூழ்ந்த பெண்களால் சிறிது நேரம் பரபரப்பு

தருமபுரி மாவட்டக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றியமைப்பு :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தருமபுரி மாவட்டக் கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளின் பொறுப்புகள் மாற்றியமைப்பு :முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, மார்ச் 20,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தருமபுரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாளர் பொறுப்பில், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திரு. கே.பி.அன்பழகன் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித்தலைவர் பொறுப்பில், பாலக்கோடு வட்டத்தைச் சேர்ந்த திரு.ஆர்.சின்னசாமியும், தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரான திரு.பூக்கடை எம்.முனுசாமியும் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தருமபுரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் பொறுப்பில்

முதலமைச்சர் ஜெயலலிதா 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் : அமைச்சர் சுந்தர்ராஜன் பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் : அமைச்சர் சுந்தர்ராஜன் பேச்சு

ஞாயிறு, மார்ச் 20,2016, தொண்டி, முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் 234 தொகுதியிலும் தனியாக நின்று வெற்றி பெரும் நிலைக்கு அ.தி.மு.க.வை உயர்த்தி உள்ளார் என்று எஸ்.பி.பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சுந்தர்ராஜன் பேசினார். திருவாடானை யூனியன் எஸ்.பி.பட்டினத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சர்புதீன், கூட்டுறவு சங்க

தி.மு.க. தோல்விக்கு முன்கூட்டியே காரணம் தேடுகிறார் கருணாநிதி : மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு

தி.மு.க. தோல்விக்கு முன்கூட்டியே காரணம் தேடுகிறார் கருணாநிதி : மேயர் ராஜன் செல்லப்பா பேச்சு

ஞாயிறு, மார்ச் 20,2016, தேர்தல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறிவரும் கருணாநிதி தேர்தல் தோல்விக்கு முன்கூட்டியே காரணம் தேடுகிறார் என மேயர் ராஜன் செல்லப்பா கூறினார். ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மராஜா, மதுரை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி துணைச் செயலாளர் ஐ.பி.எஸ். பாலமுருகன் ஆகியோர் முன்னிலை