அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுக பொறுப்பாளர்கள் மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016, தென் சென்னை தெற்கு, தேனி மாவட்டங்களைச் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலவிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னையில்..: தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பில் இருக்கும் எம்.எம். பாபு அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் ஏற்கனவே வகித்து வரும் ஜெயலலிதா பேரவையின் மாவட்டத் தலைவராகத் தொடர்ந்து செயலாற்றுவார். தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலராக,

புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

புதிய கட்சி தொடங்கினார் எர்ணாவூர் நாராயணன் ; ‘அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்’ என்று அறிவிப்பு

சனி, மார்ச் 12,2016, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாருக்கும், துணை தலைவராக இருந்த எர்ணாவூர் நாராயணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அக்கட்சியில் இருந்து எர்ணாவூர் நாராயணன் நீக்கப்பட்டார். இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சியை கைப்பற்றுவேன் என்று கூறி வந்த எர்ணாவூர் நாராயணன் திடீரென்று புதிய கட்சியை தொடங்குவேன் என்று அறிவித்தார். அதன்படி, ‘சமத்துவ மக்கள் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று அவர் தொடங்கினார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர்

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிய 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.விலையில்லாமல் சுத்தமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்கள். முதற்கட்டமாக சென்னையில் தற்போது 20 இடங்களில் குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் ‘கியூ’வில் நின்று தண்ணீரை பிடித்து செல்கிறார்கள். தனியாரிடம் குடிநீர் வாங்கினால் மாதம் குறைந்தபட்சம் 900 ரூபாய் வரை செலவாகும். இப்போது அரசு விலையில்லாமல் குடிநீர்

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

வெள்ளி, மார்ச் 11,2016, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும், திருநங்கைகளும் சூளுரைத்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்யும் நோக்கில், தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

வெள்ளி, மார்ச் 11,2016, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 4 மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அந்த பகுதி பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த பகுதி என கூறியுள்ளார். 1974

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

வெள்ளி, மார்ச் 11,2016, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்துடன்கூடிய இரு சக்கர வாகனங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சியினருக்கு இலவசமாக வழங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது உருவப்படத்துடன், நெல்லை மத்திய மாவட்டக் கழகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்கள், வாக்காளர்களுக்கு இன்று காலை விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் அ.இ.அ.தி.மு,க.வினர்

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் : தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் :  தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளபோதிலும்,  தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தாம் விரும்பும் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது, தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கே.சி.பழனிசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.